For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரம்பி வழியும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை... உபரி நீர் வெளியேற்றம் - வீடியோ

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பிவிட்டதால் உபரை நீர் வெளியேற்றப்படுகிறது. அதனால் 16 கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. அதனையொட்டி, 16 கிராமங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Krishnagiri KRB dam is reached its' maximum water level

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத அளவுக்கு வறட்சியும் தண்னீர் பஞ்சமும் நிலவி வந்தது. தற்போது தென்மேற்கு பருவ மழையால் தமிழகம் மட்டுமில்லாது கர்நாடக மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்ததால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கேஆர்பி அணையின் மொத்த கொள்ளளவான 44 அடிக்கு நீர் நிரம்பிவிட்டதால், உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், நீர் வெளியேறும் பகுதியை ஒட்டியுள்ள 16 கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

English summary
KRB dam is filled completely as continuous rainfall in krishnagiri and Karnataka region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X