• search

கிருஷ்ணகிரி: குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Posted By:
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    கிருஷ்ணகிரி: ஒன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தேவர் ஒளி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவேதா. இவர் பள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னாச்சரி என்பவரின் மனைவி. இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இவர்களுக்கு பூஜா அஸ்வினி என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கணவரைப் பிரிந்த சுவேதா தேவர் ஒளி மங்கலத்தைச் சேர்ந்த டிரைவர் உதயகுமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

    Krishnagiri verdict: Double life sentenced to a child assaulter

    இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு உதயகுமார் தனது பாதுகாப்பில் இருந்த சுவேதாவின் ஒன்றரை வயது குழந்தை பூஜா அஸ்வினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக சுவேதா அளித்த புகாரின் பேரில் தளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

    இதையடுத்து, ஒன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த உதயகுமாருக்கு இன்று கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அன்பு செல்வி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் குழந்தையைக் கொன்றதற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதித்துள்ளார். ஆக மொத்தம் உதயகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Krishnagiri court verdict double life sentenced to a accused Udhayakumar for assaulted a one and half year old child in 2016 at Thenkanikottai.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more