For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயல்: வீடு, உணவு இல்லாமல் மலைவாழ் பழங்குடி கடும் அவதி.. கிருஷ்ணப்பிரியா பவுண்டேஷனின் கள நிலவரம்

ஓகி புயலால் மலைவாழ் பழங்குடியின மக்கள் வீடு, உணவு இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணப்பிரியா பவுண்டேஷன் சார்பில் களநிலவரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாட்டுக்காக கவலைப்படுவோரே கொஞ்சம் மனிதர்களுக்காகவும்...வீடியோ

    கன்னியாகுமரி: ஓகி புயலால் பேச்சிப்பாறை அருகே உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமலும், உண்ண உணவு இல்லாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா பவுண்டேஷனின் கள நிலவரம் தெரிவித்துள்ளது.

    கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் குறித்த விவரம் அறியாத மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுவிட்டனர்.

    இவர்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஓகி புயலால் காணாமல் போய்விட்டனர். இவர்களை கண்டுபிடித்து மீட்கக் கோரி கன்னியாகுமரியில் மீனவர்களும்,
    காணாமல் போன மீனவர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புயலால் பாதிப்பு

    இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தனது பேஸ்புக் பக்கத்தில் அவரது பவுண்டேஷன் சார்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் கள நிலவரம் :
    பேச்சிப்பாறை அருகில் உள்ள மலைவாழ் பழங்குடி மக்கள் இந்த புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்காலிக கூடாரங்கள்

    தற்காலிக கூடாரங்கள்

    பெரும்பாலும் குடிசை வீடுகளாக உள்ள இவர்களது வாழ்விடங்கள் இப்புயலால் சேதமடைந்துள்ளது. இதனால் தார்பாய் மூலம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் கூட்டமாக வசிக்கின்றனர்.

    சில அமைப்புகளே உதவி வருகின்றன

    சில அமைப்புகளே உதவி வருகின்றன

    புயல் நிவாரணமாக கிடைக்கும் அரிசியை சமைத்து உண்கின்றனர். இதுவரை 3 முதல் 4 தனியார் அமைப்புகள் இவர்களுக்கு உதவியுள்ளனர்.

    நீங்களும் உதவி செய்யுங்கள்

    நீங்களும் உதவி செய்யுங்கள்

    கிருஷ்ணபிரியா பவுண்டேசன் சார்பாக நேற்று முதல் இம்மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய ஆரம்பித்துள்ளோம். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளில் உங்களால் இயன்ற உதவியை செய்யவும். கிருஷ்ணபிரியா பவுண்டேசன்- 89399 99062.

    English summary
    Krishnapriya has given ground report from Kanyakumari District. Her foundation has started relief materials from yesterday morning. She also urged others to help them and gave mobile number.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X