For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் சார்.. ஆளுநரிடம் கூறி நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுங்க! கே.எஸ்.அழகிரி புது யோசனை!

Google Oneindia Tamil News

தென்காசி: ஆளுநர் ரவியிடம் கூறி தமிழகத்துக்கு நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Electricity Bill மக்களை நேரடியாக பாதிக்கும் | KS Alagiri Speech

    ஆளுநர் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நெருக்கம் காட்டி வரும் நிலையில் கே.எஸ்.அழகிரி இந்த யோசனையை வழங்கியுள்ளார்.

    தனக்கிருக்கும் செல்வாக்கு மூலம் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுக் கொடுத்தால் அது தமிழக மக்களுக்கு அவர் செய்த பெரிய உதவியாக இருக்கும் என கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.

    ஆளுநர் ரவி - ரஜினி சந்திப்பை அரசியலாக்குகின்றனர்..இருப்பிடத்தை காட்டவே விமர்சனம்.. அண்ணாமலை பதிலடி! ஆளுநர் ரவி - ரஜினி சந்திப்பை அரசியலாக்குகின்றனர்..இருப்பிடத்தை காட்டவே விமர்சனம்.. அண்ணாமலை பதிலடி!

    தென்காசி மாவட்டம்

    தென்காசி மாவட்டம்

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபயணம் மேற்கொண்ட கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் ஜனநாயக முறையில் நடைபெற்று வரும் அரசை ஆளுநர் ரவி துன்புறுத்தி வருவதாகவும் மரபுக்கு விரோதமாக தன்னிச்சையாக அவர் செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    தேர்வு

    தேர்வு

    அதைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் உரிமைகளை ஆளுநர் ரவி மூலம் பறிப்பதற்கு பாஜக முயற்சித்து வருவதாகவும் இதற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தமிழக மக்களை ஆளுநர் மிகவும் விரும்புகிறார், தமிழக மக்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார் என ஆளுநரை சந்தித்து விட்டு வந்த பிறகு ரஜினிகாந்த் கூறியதை சுட்டிக்காட்டிய கே.எஸ்.அழகிரி, அப்படியானால் ஆளுநரிடம் கூறி நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுங்க என கோரிக்கை வைத்தார்.

    பாரபட்சம்

    பாரபட்சம்

    தனக்கிருக்கும் செல்வாக்கு மூலம் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுக் கொடுத்தால் அது தமிழக மக்களுக்கு அவர் செய்த பெரிய உதவியாக இருக்கும் என கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். இதேபோல் வரிகள் மூலம் மத்திய அரசுக்கு தமிழகம் 6% நிதி அளிப்பதாகவும் ஆனால் அதேவேளையில் திட்டங்கள் என்ற பெயரில் தமிழகத்துக்கு 1.2% மட்டுமே மத்திய அரசு நிதி வழங்குவதாகவும் கூறி வேதனைத் தெரிவித்தார்.

    காங்கிரஸ் பாய்ச்சல்

    காங்கிரஸ் பாய்ச்சல்

    இது குறித்தும் ஆளுநரிடம் ரஜினிகாந்த் பேச வேண்டும் என கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டார். ஆளுநர் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நெருக்கம் காட்டி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அவர் மீது பாய்ச்சல் காட்டியிருக்கிறது.

    English summary
    Rajinikanth should talk to the Governor Ravi and get NEET exempted : ஆளுநர் ரவியிடம் கூறி தமிழகத்துக்கு நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X