For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதர் வாரிய காலண்டரில் காந்திக்கு பதில் மோடி படம்.. குமரி அனந்தன் உண்ணாவிரதம்

கதர் துறை காலண்டரில் காந்தி படம் அகற்றப்பட்டு அதில் பிரதமர் மோடி படம் இடம்பெற்று உள்ளது. எனவே இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது என்றார் குமரி அனந்தன்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கதர் கிராம கைத்தொழில் வாரிய காலண்டரில் இருந்து காந்தி படம் அகற்றப்பட்டதை கண்டிக்கும் வகையில் காந்தி பேரவை சார்பில் அதன் தலைவர் குமரி அனந்தன் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Kumari Annthan did fasting

கதர் துறை காலண்டரில் காந்தி படம் அகற்றப்பட்டு அதில் பிரதமர் மோடி படம் இடம்பெற்று உள்ளது. எனவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த காலண்டரில் காந்தி படம் இடம்பெற செய்யவேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது என்றார் குமரி அனந்தன்.

உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்துக்கு மாலை வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்
குமரி அனந்தனுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

English summary
Kumari Annthan did fasting to show his oppose to Modi for using his image in the Khadi calender.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X