For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரங்கணி காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 11-ஆக ஆனது

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்கணி தீ விபத்து-விவேக் மனைவி திவ்யா உயிரிழப்பு- வீடியோ

    தேனி: குரங்கணி காட்டு தீயில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா பலியானார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது.

    குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நேற்று முன் தினம் அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.

    அப்போது மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.

    9 பேர் பலி

    9 பேர் பலி

    அவர்களில் 27 பேரில் 10 பேர் எவ்வித காயமின்றி மீட்கப்பட்டுவிட்டனர். இந்த விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலியாகி விட்டனர்.

    ஈரோடு

    ஈரோடு

    அவர்களில் சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகிய 6 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் மொத்தம் சேர்த்து 9 பேர் வரை உயிரிழந்தனர்.

    10 ஆனது எண்ணிக்கை

    10 ஆனது எண்ணிக்கை

    இந்நிலையில் குரங்கணியிலிருந்து மீட்கப்பட்டவர்களில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    கணவர் விவேக் பலி

    கணவர் விவேக் பலி

    இதனால் குரங்கணி மலை பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது. இவரது கணவர் விவேக்கும் தீவிபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே நேற்று உயிரிழந்தார். இருவரும் 3 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    தீயில் கருகினர்

    தீயில் கருகினர்

    விவேக் துபாயில் பணிபுரிவதால், மனைவி திவ்யாவை வரும் 28-ஆம் தேதி துபாய்க்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

    English summary
    Kurangani Forest fire: Death toll increases to 11. Newly married Vivek and his wife Divya trapped in Fire accident and Vivek dies. Divya who was recovered more than 50 % burns died today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X