For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வா.. அப்புறம் பேசுவோம்- கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ

By Manjula
Google Oneindia Tamil News

சென்னை: நீங்கள் எந்தக் கட்சி என்று கேட்டால் நாளைக்கு உங்களுக்கே சந்தேகம் வரும் என்று கூறி தனது டிவிட்டருக்கு வந்து கலாய்த்த ரசிகரை " போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வா.. அப்புறம் பேசுவோம்" என்று பதிலுக்கு கலாய்த்து அனுப்பியிருக்கிறார் நடிகை குஷ்பூ.

திரைப்படத்தயாரிப்பு, சின்னத்திரை நிகழ்ச்சி, அரசியல் என்று எந்நேரமும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தாலும் சமுகவலைதளங்களிலும் உடனுக்குடன் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை குஷ்பு.

எந்த ஒரு தகவலாக இருந்தாலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உடனே பகிர்ந்து கொள்ளும் குஷ்பூ, பலருடன் அவ்வப்போது உரையாடவும் செய்கிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் அடிக்கடி கட்சி தாவுகிறீர்கள் நாளைக்கு எந்தக் கட்சி என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்க, குஷ்பூ கோபமாகப் பதிலளிக்க அந்த இடமே போர்க்களமாக மாறிவிட்டது.

இருவரின் உரையாடலை இங்கே பார்க்கலாம்.

நீங்கள் எந்தக் கட்சி

அண்மையில் கவுதம் என்ற ரசிகர் உங்களுக்கு வேற வேலை இல்லாமல் கட்சி தாவிக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் அதிமுக, பின்பு திமுக இப்ப காங்கிரஸ் நாளைக்கு எந்தக்கட்சி என்று கேட்டால் உனக்கே சந்தேகம் வரும் என்று சொல்லியிருந்தார்.

குஷ்பூவின் கோபம்

அதற்கு உடனடியாகப் பதிலளித்த குஷ்பு, "முட்டாள்னு நிருபிக்கிறீங்க, நான் எப்போது அதிமுகவில் இருந்தேன், போய் நல்லா ஹோம்ஒர்க் பண்ணிட்டு வா அப்புறம் பேசலாம்" என்று காட்டமாகப் பதிலளித்தார்.

விடாது கருப்பு

ஆனாலும் விடாத அந்த ரசிகர் நீங்க அதிமுக வுல இல்லேன்னு தெரியும் ஆனா உங்க நேரடி சப்போர்ட் யாருக்குன்னு எங்களுக்கு நல்லா தெரியும். ஹோம் வொர்க்ல சிறப்பானவங்க குஷ்பூ மேடம்னு ஊருக்கே தெரியும் என்று பதிலளித்து இருந்தார்.

நீங்க ஹோம்வொர்க் பத்தி பேசக்கூடாது

நீங்க ஹோம்வொர்க் பத்தி பேசக்கூடாது

மேலும் நீங்க ஜெயா டிவில நடத்திட்டு இருந்த ஜாக்கெட் நிகழ்ச்சியில உங்களோட ஹோம் வொர்க் சரியில்லன்னு தான் உங்களை அனுப்பினாங்க. அதனாலதான் நீங்க திமுக போனீங்க என்று கேட்டார்.

காணாமல் போன குஷ்பூ

காணாமல் போன குஷ்பூ


ஆனால் முதல் ட்வீட்டுக்கு பதிலளித்ததோடு குஷ்பூவை ஆளையே காணோம். இந்நிலையில் கேள்வி கேட்ட ரசிகர் மற்றும் குஷ்பூ இருவருக்கும் ஆதரவாக மேலும் பலர் இந்த சண்டையில் உள்ளே வர அந்த இடமே போர்க்களமாகிவிட்டது.

என்னம்மா அங்க சத்தம்...சும்மா பேசிக்கிட்டிருந்தோம் மாமா...

English summary
Actress Kushboo Twitter Page her fan Asked one Idiot Question, Kushboo heated replied to this question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X