For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வஞ்சக சிரிப்புடன் அடிமைகளுக்காக காத்துக் கிடக்கிறார்கள் டுபாக்கூர் சாமியார்கள்- நடிகை குஷ்பு 'பொளேர்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தம்மை பெரியாரிஸ்ட் என்று பிரகடனப்படுத்தி வரும் நடிகை குஷ்பு டுபாக்கூர் கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

நக்கீரன் வாரமிருறை இதழில் நடிகை குஷ்பு 'லாபம் கொழிக்கும் காவி உடை' என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது:

கட்சியின் தலைமை அழைத்ததன் பேரில் அண்மை யில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது வழக்கமாக நடக்கும் சோதனைகளை செய் தனர் ஏர்போர்ட் அதிகாரிகள். அப்போது, என்னுடைய கீ செயினைக் கூட விட்டு வைக்க வில்லை.

சின்ன நெயில் கட்டரைக் கூட எடுத்துச்செல்ல அனுமதிக்க வில்லை. ""கீ செயினில் என்ன இருக்கப்போகிறது?'' என கேட்ட போது, ""மன்னிக்கவும்... இது, எங்களுடைய டூட்டி மேடம்'' என்றனர்.

kushboo dares Self Style Godmans

அந்தசமயத்தில், மும்பையின் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதேமா விமானத்தில் செல்லும்போது தனது திரிசூலத் தையும் எடுத்துச் செல்கிறார் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அதைப்பற்றி, ஏர்போர்ட் அதிகாரிகளிடம், ""ஒருபெண் சாமியார் திரிசூலத்தையே விமானத்தில் எடுத்துச் செல் கிறார். ஆனால், எங்களிடம் கீ செயினைக் கூட விட்டு வைப்ப தில்லை. சாமியார்கள் என்றால் அவ்வளவு பக்தியும் பரவசமும் உங்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது'' என்று சொல்லிவிட்டுச் சென் றேன்.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார் களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது. ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினி களும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்ச ணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக் கின்றன. இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேக ரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல.

ஆன்மிகவாதிகளிடம் தங்கள் குறைகளைச் சொல்லி அதற்கு நிவாரணம் தேடும் முகமாகத் தான் அவர்களைத் தேடி மக்கள் ஓடுகிறார்கள். மக்களிடம் பக்தி அதிகரிக்கும்போது அந்த சாமியார்களே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அந்த கடவுளைத் தேடி கோயில்களுக்குச் செல்கிறார்கள். போக முடியாதவர்கள் அவரவர் வீடுகளிலேயே பூஜிக்கிறார்கள். அப்போது கடவுளிடம் நேரடியாகவே குறைகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைப்பதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை.

அப்படி நேரடியாகவே முறையிட்டும், தனது பக்தர்களின் குறைகளை தீர்க்க முன்வராத கடவுள், இடைத்தரகர்கள் போல தங்களைக் காட்டிக்கொள் ளும் சாமியார்கள் வழியாகவா வந்துவிடப் போகிறார்? கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு? இதை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை? மக்களிடம் இருக்கும் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் சாமியார்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் .இதனை மக்கள் புரிந்து கொள்ளாததால்தான் அத்தனை கிரிமினல் வேலைகளையும் செய்து வருகிறார்கள் சாமியார்கள்.

ஒவ்வொருவரின் சொந்த புத்தியும் சொல் லாத எந்த ஒரு விசயத்தையும் சாமியார்கள் சொல்லி விடுவதில்லை. சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்.

சிலமாதங்களுக்கு முன்பு, மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் என்கிற சட்டத்தை அறிமுகப்படுத் தியது கர்நாடக அரசு. ஆனால், இதை எதிர்த்து சாமியார்கள் கூட்டம் கொந்தளித்ததும் அந்தச் சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். கடவுளின் பெயரால் மூடநம்பிக் கைகளை சாமியார்கள் தொடர்ந்து பாதுகாப் பதன் பின்னணியில் அவர்களிடம் இருக்கும் பணவெறி, காம இச்சை, சுயநலம் போன்றவைகள்தான் காரணங்களாக இருக்கின்றன.

"எளிமையும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டிய மடங்கள் இன்றைக்கு ஆடம்பர பங்க ளாக்களாக உருமாறி நிற்கிறது. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ஆன்மிகத்தைப் போதிக்கும் கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றன' என்கிறார் என்னுடைய பகுத்தறிவு தோழர். அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை.

ஏனெனில், நமது தேசத்தில் கடந்த 20 ஆண்டு களில் கார்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல பல பணக்கார சாமியார்களும் வளமையாக வளர்ந்தே இருக்கின்றனர். அப்படிப்பட்ட சாமியார்களின் வரவு செலவுகள், வர்த்தக விளம்பரங்கள், சொத்துக்களைப் படித்தால் தலைச் சுற்றுகிறது. டெல்லியில் ஆசிரமம் வைத்துக் கொண்டு அத்தனை தகிடுத்தத்தங்களை யும் செய்த அஸ்ராம்பாபுவின் ஆண்டு வருமானம் 350 கோடி, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் வைத்திருக்கும் அமிர்தானந்தமயின் ஓராண்டு வர்த்தகம் 500 கோடி, வாழும் கலையை காசு வாங்கிக்கொண்டு மக்களுக்கு போதிக்கும் ரவி சங்கரின் வருட வருமானம் 450 கோடி, யோக சிகிச்சைகளை செய்து வரும் பாபாராம்தேவின் வரவு -செலவு 350 கோடி என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.

இதில் ஒவ்வொரு சாமியா ரின் சொத்துக்களை கணக்கிட் டால் ஒவ்வொருவரும் சுமார் 1000 கோடிக்கு அதிபதிகளாகவே இருக்கிறார்கள் என்றும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டு கின்றன. இதில் கொடுமை என்னன்னா, இவர்களின் வரி ஏய்ப்புக்கு அரசாங்கமே துணை நிற்பதுதான். ஒரு சாமானியன் தனது வருமானவரிக்கணக்கில் 1 ரூபாயை மறைத்து விட்டால் அவனுக்கு எதிராக எத்தனை சட்டங்கள் பாய்கின்றன? அதில் ஒரு சட்டமாவது கோடிக்கணக் கில் வரி ஏய்ப்பு செய்யும் சாமியார்கள் மீது பாய்ந்திருக் கின்றனவா? இல்லையே !

மதங்களைக் கடந்த ஆன் மிகம் என சொல்லிக் கொண்டு அத்தனை சாமியார்களும் அரசியலை தங்கள் கைப் பிடிக்குள் வைத்திருப்பதுதான் இதற்குக் காரணம் என சொல்ல லாம். நேரடியான தங்களது அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை பல சாமியார்களும் உணர்த்திக் கொண்டு தானிருக்கிறார்கள். அபரிமிதமான நிதிக் குவியல் களால் தங்களின் மடங்களை கார்பரேட் நிறுவனமயப்படுத்தி விடுவதால் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எளிதில் கைக்கூடி விடுகிறது.

கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங் களுக்கும் நம் நாட்டில் பஞ்ச மிருப்பதில்லை. குஜராத் மாநிலம் ஜூனாகாத் மலைப் பகுதியை சிவபெருமானின் முகமாக பாவித்து வழிபாடு நடத்துகிறார்கள் நிர்வாண சாமியார்கள். இதே மலைப்பகுதியை ஜைன மதத் தினரும் வழிபடுகின்றனர். இம் மலை அடிவாரங்களில் நிர்வாண சாமியார்களின் மடங்கள் ஏராளமாக இருக்கின்றன. கும்ப மேளா காலங்களில் ஹரித்துவார், அலகாபாத் இடங்களில் ஒன்று திரண்டு வழிபாடு நடத்துவது பொதுவான நிலையாக இருந்தா லும் ஒவ்வொரு வருசமும் மகா சிவராத்திரி நாளில் ஜூனாகாத் மலை அடிவாரத்தில் இவர்கள் ஒன்றுதிரண்டு நிர்வாணக் குளியல் நடத்தி வழிபடு வதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள். நிர்வாண சாமியார் களில் எந்த பிரிவினர் முதலில் குளிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைக்குமாம். அத னால் நிர்வாண சாமியார் களிடையே பலத்த போட்டி ஏற்பட்டு வெட்டுக் குத்து எல் லாம் நடக்குமாம். சிவபெருமா னின் அருள் கிடைக்க இப்படி ஒரு மூடநம்பிக்கை, நிர்வாண சாமியார்களிடத்தில் காலகால மாக இருக்கிறதாம்.

போலிசாமியார்கள், கார்ப ரேட் சாமியார்கள், நிர்வாணச் சாமியார்கள் என சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் அரசியல்வாதிகள் அவர்களை கைவிடுவதில்லை. அதனால் சாமியார்களின் செல் வாக்கும் குறைவதில்லை. ஒரு வேளை சாமியார்களின் செல் வாக்கு குறைந்துபோனால், புதுப் புது சாமியார்கள், அரசியல்வாதி களால் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆன்மிகத்தில் மதிமயங்கும் நம் மக்களும் சாமியார்களின் அரு ளாசியை பெறுவதற்கு அடிமையாகிக்கொண்டே இருப்பதால் வஞ்சகச் சிரிப்புடனே காத்துக் கிடக்கிறார்கள் நம் தேசத்து நவீன சாமியார்கள்.

என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப் பதும் கிடையாது. அவர்களு டைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு!

இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார்.

English summary
Congress Spokes person Actress Kushboo slammed the so called self styled godmans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X