For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்ஷய திருதியை: தன்வந்திரி பீடத்தில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம்

அக்ஷய திரிதியை முன்னிட்டு புதன்கிழமையன்று ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் நடைபெறுகிறது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி 18.04.2018 புதன் கிழமை அக்ஷய திரிதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் நடைபெறுகிறது.

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, "அக்ஷய திருதியை" எனப்படுகிறது. 'அக்ஷயம்' என்றால் வளர்வது என்று பொருள். அக்ஷய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அக்ஷய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.

வனவாச காலத்தில், சூரியப் பகவானை வேண்டி தர்மர் அக்ஷய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அக்ஷய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அக்ஷய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.

ஏழைகளுக்கு தானம்

ஏழைகளுக்கு தானம்

தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அக்ஷய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது.

தர்ப்பணம் செய்யலாம்

தர்ப்பணம் செய்யலாம்

இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான அக்ஷய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும்.

மகாலட்சுமியின் அருள்

மகாலட்சுமியின் அருள்

உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும்.

உணவு தானம்

உணவு தானம்

வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல. காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்ய வேண்டும்.

தயிர்சாதம் தானம்

தயிர்சாதம் தானம்

ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ண பரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். பாஞ்சாலி துகிலுரியப்படும் நேரத்தில், குறையாத புடவையைக் கொடுத்து அவள் மானம் காத்தது இதே நாளில் தான். இன்றைய தினத்தில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும். வாழ்வு அமையும்.

லட்சுமி குபேரர் யாகம்

லட்சுமி குபேரர் யாகம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான அக்ஷய திருதியை நாளை முன்னிட்டு வருகிற 18.04.2018 புதன் கிழமை தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி முன்பாக யாக குண்டம் அமைத்து 16 கலசங்கள் வைத்து தாமரை மணிகள், தாமரை புஷ்பங்கள், தேன், நெய் மற்றும் பலவிதமான விஷேச புஷ்பங்கள், திரவியங்கள் கொண்டு மாபெரும் ஸ்ரீ குபேர லஷ்மி யாகம் நடைபெற உள்ளது.

ஸ்ரீகுபேர யந்திர பூஜை

ஸ்ரீகுபேர யந்திர பூஜை

நிறைவாக ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு 16 விதமான திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகமும் 1008 சொர்ண பைரவர் காசுகளை கொண்டு மகா அர்ச்சனையும் ஸ்ரீ குபேர யந்திர பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Lakshmi Kubera Homa at Sri danvanthiri arokiya peedam in Walajapet. This special homa invoking Lakshmi, the Goddess of Wealth, and Kubera, Banker of Heaven, on Akshaya Tritiya can bless you with luxuries, financial growth, success and remove obstacles that block wealth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X