For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெகதீசன் துரையின் உடலை சுமந்த போலீஸ் எஸ்.பி.... 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம்

மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட ஜெகதீசன் துரையில் உடல், முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை மாவட்டத்தில் மணல் மாபியாயாக்களால் போலீஸ்காரர் அடித்து கொலை!

    நெல்லை: மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட ஜெகதீசன் துரையின் உடலை மாவட்ட எஸ்பி சுமந்து வந்தார். பின்னர் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் ஜெகதீசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் ஜெகதீசன் துரை. நேற்று நம்பியாற்றில் சிலர் மணலை அள்ளிச் செல்வதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

    Last rites have done for Jagadeesan Durais body in his home town

    அதன் பேரில் மணல் கொள்ளையை தடுக்க நம்பியாற்றுக்கு விரைந்தார். அதிகாலை நேரத்தில் ஜெகதீசனை கண்ட மணல் கொள்ளையர்கள் அவரை கம்பியால் தாக்கியும் தலையில் அடித்தும் கொலை செய்தனர்.

    இவரது உடல் சொந்த ஊரான நாங்குனேரி அருகே உள்ள சிந்தாமணியில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.

    அப்போது அவரது உடலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சுமந்து சென்றார். இதையடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    English summary
    Last rites performed for Police Constable Jagadeesan Durai who was murdered by Sand Mafia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X