For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று நம்பிக்கை தந்த அப்பலோ அறிக்கை... ஓராண்டின் மறையாத நினைவுகள்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பலோ மருத்துவமனை ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் தான் அறிவித்தது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    இதே நாள்! ஜெ-வின் உடல்நிலை அப்போது எப்படி இருந்தது தெரியுமா?-வீடியோ

    சென்னை : ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்படுவதாக செய்திகள் பரவின, ஆனால் இதில் உண்மையில்லை ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பலோ மருத்துவமனை ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் தான் அறிவித்தது.

    காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக செப்டம்பர் 22ம் தேதி நள்ளிரவில் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரச்சாரத்திற்காகவோ அல்லது வழக்கு விசாரணைக்காகவோ எதுவாக இருந்தாலும் வெளியூர் சென்றால் இரவு வெளியில் தங்காத ஜெயலலிதா முதன்முதலில் செப்டம்பர் 22ம் தேதி இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார்.

    அன்று வீட்டைவிட்டு வெளியேறியவர் தான் இரண்டு நாளில் வந்துவிடுவார், நன்றாக இருக்கிறார் என்று ஆளாளுக்கு அடித்துவிட்டனர். ஆனால் இறுதியில் 72 நாட்களுக்குப் பிறகு சடலமாகவே வீட்டிற்கு வந்தார் ஜெயலலிதா. செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா உடல்நிலை குறித்த முதல் அறிக்கையை செப்டம்பர் 23ல் வெளியிட்டது அப்பலோ மருத்துவமனை.

    வெளிநாட்டுக்கு இல்லை

    வெளிநாட்டுக்கு இல்லை

    இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இரண்டாவது அறிக்கையை வெளியிட்டது மருத்துவமனை. அதில் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்படுகிறார் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

    வீடு திரும்புவார்

    வீடு திரும்புவார்

    அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான உணவை அவர் உட்கொள்கிறார் என்றும் கூறப்பட்டது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அந்த அறிக்கையில் கூறி இருந்தது.

    நம்பிக்கை அளித்த அறிக்கை

    நம்பிக்கை அளித்த அறிக்கை

    வீடு திரும்பியது விரைவில் அரசுப் பணிகளைத் தொடங்குவார் என்றும் நம்பிக்கை அளித்திருந்தது மருத்துவமனை. இந்த அறிக்கையால் தான் அதிமுகவினர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று உறுதியுடன் நம்பிக்கையோடு இருந்தனர்.

    உண்மை நிலவரமா?

    உண்மை நிலவரமா?

    ஒருவேளை அப்பலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைபடி ஜெயலலிதா வீடு திரும்பியிருந்தால், இன்றைய அரசியல் பரப்புகள் இல்லாமல் தமிழக உரிமைகள் நிலைநாட்டப்பட்டிருக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் நல்ல உடல்நலனுடன் இருந்தார் என்பதே அப்பலோ அறிக்கை சொல்லும் ஆதாரம்.

    யார் சொல்வது சரி?

    யார் சொல்வது சரி?

    ஆனால் அக்டோபர் 1ம் தேதி முதல் சசிகலாவையே மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று தினகரன் கூறுகிறார். அப்படியானால் மருத்துவமனை சொல்லும் ஜெயலலிதா உடல்நிலை அறிக்கை சரியானதா அல்லது தினகரன் சொல்வது சரியானதா என்ற சந்தேகம் எழுகிறது.

    English summary
    Last year on the same day Apollo hospitals cleared the rumours about Jayalalitha brought to abroad for treatment and assured will be discharged from hospital within few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X