For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவியிடமே பாதுகாப்பு கேட்ட வக்கீல்: கொலையாளியின் கிளுகிளு பேச்சு சிக்கியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வக்கீல் முருகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சண்முகநாதன் பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று மாலை சரண் அடைந்துள்ளார். இந்த வழக்கில் கள்ளக்காதலன் சண்முகநாதனுடன் லோகேஷினி பேசிய ஆடியோ வெளியாகி பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டிய மனைவியே மனைவியே, கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை ஸ்கெட்ச் போட்டது தெரியாமல், அவளிடமே தன்னை காப்பாற்றுமாறு கொலையான அப்பாவி வக்கீல் புலம்பி உள்ளது தெரியவந்துள்ளது.

Lawyer murder case: Boyfriend surrenders

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்தவர் முருகன், 44. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவருக்கு லோகேஷினி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சூளைமேட்டில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.

லோகேசினியும் முருகனும் காதல் திருமணம் செய்துள்ளனர். முருகனுக்கு தொழிலில் மிகவும் குறைந்த வருமானமே வந்தது. ஆனால், அவரைவிட லோகேசினி அதிகம் சம்பாதித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் கடந்த சில மாதமாக கருத்து வேறுபாடு இருந்தது.

வக்கீலாக இருந்தாலும் முருகன் மிகவும் சாதுவான குணம் உடையவர். அதிர்ந்து கூட பேசத் தெரியாதவர்.ஆனால், லோகேசினி அவருக்கு நேர் எதிரான குணம் கொண்டவர். இதனால், கணவன், மனைவி இடையே இடைவெளி அதிகரித்தது.

இந்நிலையில்தான் லோகிஷினி பள்ளி பருவ காதலனான சண்முக நாதனின் தொடர்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சண்முக நாதனிடம், தங்கள் வீட்டின் சில பகுதி சேதம் அடைந்துள்ளது. அதை புதுப்பித்துக் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதை மறுக்க முடியாத சண்முக நாதனும் லோகேஷினியின் சூளைமேடு வீட்டை புதுப்பித்துக் கொடுத்துள்ளார். அப்போது, இருவரும் அடிக்கடி பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பல முறை தனிமையில் சந்தித்தும் பேசியுள்ளனர்.

நாட்கள் செல்ல செல்ல பள்ளி பருவ காதல் மீண்டும் தொடர்ந்துள்ளது, தற்போது எனக்கு 40 வயது ஆகிறது. உனக்காகவே நான் திருமணம் செய்து கொள்ளாமல் உன் நினைவிலேயே இருக்கிறேன் என்று சண்முக நாதன் விரக்தியில் லோகேஷினியிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கணவரை முற்றிலும் ஒதுக்க ஆரம்பித்துள்ளார் லோகேஷினி. தொடர்ந்து கணவர் மீது எரிச்சலை கொட்டியுள்ளார். இந்நிலையில்தான், லோகேஷினியும் சண்முக நாதனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதற்கு வக்கீல் முருகன் எப்படியும் தடையாக இருப்பார் என லோகேஷினி நினைத்தார். இதைத் தொடர்ந்து கணவரை எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுங்கள். ஆனால், கொலையை நாம் செய்ததாக தெரிய கூடாது என கள்ளக்காதலனுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சண்முக நாதனும் லோகேஷினியும் ரூ.2 லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்துள்ளார். முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கைமாறியிருக்கிறது. கூலிப்படையினர் கடந்த மாதம் முதல் வாரத்தில் வீட்டு முன் ஆயுதங்களுடன் நோட்டம் விட்டுள்ளனர். இதை தெரிந்து கொண்ட முருகன். மனைவியிடம், யாரோ என்னை கொலை செய்து நகை பறிக்க ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர் என முறையிட்டுள்ளார்.

பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உங்களை யாராவது கொலை செய்ய முயற்சி செய்வார்களா? என லோகேஷினி சமாதானம் பேசி அனுப்பி உள்ளார். தொடர்ந்து கள்ள காதலனான சண்முக நாதனுக்கு போன் செய்து.. ஒரு கொலை செய்ய கூட துப்பு இல்லை. உன்னை நம்பி எப்படி நான் வர முடியும் என கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதியும் முருகனை தீர்த்துக்கட்ட முயற்சி நடந்துள்ளது. ஆனால், இந்த முயற்சியில் ஈடுபடுவது தனது தொழில் போட்டியில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என நினைத்து முருகன் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிப்போம் என முருகன் தெரிவித்துள்ளார். ஆனால், புகாரெல்லாம் வேண்டாம் என மனைவி தடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று முருகன் வசித்து வந்த சூளைமேடு வீட்டு முன் வைத்தே கொலை செய்ய கூலிப்படையினர் முடிவு செய்து அங்கு காத்திருந்துள்ளனர். ஆனால், அவர் வேக வேகமாக காரில் ஏறி கோடம்பாக்கம் நோக்கி புறப்பட்டார். இன்று எப்படியாவது தீர்த்து கட்டி விடுங்கள் என லோகேஷினி கள்ளக்காதலனுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். கணவர் செல்லும் இடம் பற்றிய தகவலையும் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டோவில் முருகனை பின் தொடர்ந்த கூலிப்படையினர் கோடம்பாக்கம் டிரஸ்புரம், 6வது தெருவில் உள்ள அஸ்டபதி அடுக்குமாடி குடியிருப்பில், முருகனை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதை கள்ளக்காதலன் சண்முக நாதன் அருகில் பைக்கில் நின்றவாறு வேடிக்கை பார்த்துள்ளார். தொடர்ந்து முருகன் இறந்ததை உறுதி செய்து கொண்டு லோகேஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சண்முக நாதன் மீது நம்பிக்கை இல்லாத லோகேஷினி கணவரது போனை தொடர்பு கொண்டுள்ளார்.அவர் எடுக்கவில்லை என்ற பிறகே முருகன் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்டுள்ளார். பிறகு கணவரை யாரோ கொலை செய்ததுபோல் நாடகமாடியுள்ளார்.

இந்த கொலை சென்னை போலீசாருக்கு பெரிய தலைலியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் முருகனை, அவரது மனைவியே கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

கொலை தொடர்பாக வக்கீல் முருகனின் மனைவி லோகேஷினி 35, வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படையினர் சுப்பு என்ற கோளார் சுப்பு ,36, முரளி, 27, சுப்ரமணி ஆகியோரை கைது செய்தனர்.

முருகன் கொலை தொடர்பாக கள்ளக்காதலன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகநாதன், அவனது கூட்டாளி ஜஸ்டின் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், சண்முகநாதன் பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று மாலை சரண் அடைந்துள்ளார்.

இதனிடையே போனில் லோகேஷினியும், கள்ளக்காதலன் சண்முகநாதனும் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் இருவரும் கிளுகிளுப்பாக பேசியுள்ளனர்.

லோகேசினி: என்னை யாரோ கொலை செய்ய திட்டம் போட்டிருக்காங்க. வெளிய போகவே பயமா இருக்குன்னு சொல்லி அவரு வீட்டுக்குள்ளயே கிடக்கார். அவரை கொலை செய்ய நாம போட்ட திட்டம் தெரிஞ்சுபோச்சோன்னு எனக்கு பயமா இருக்கு. எந்த விஷயமும் தெரிஞ்சுடாம பாத்துக்க....

நேத்து நைட் முழுக்க பயந்துட்டே இருந்தாரு. என்னை தூங்கவே விடலை. புலம்பிட்டே இருந்தாரு. யாரோ என்னை நோட்டம் பாக்கிறாங்க. இதை செய்றது யார்னு கண்டுபிடிக்காம விடமாட்டேன்னு சொல்லிட்டே இருந்தார். நான்தான் அவர் கவனத்தை திசைதிருப்பி, ஒருமாதிரி சமாதானம் பண்ணினேன்.

சண்முகநாதன்: அதுபத்தி எல்லாம் கவலைப்படாதடா செல்லக்குட்டி. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். அவன் (முருகன்) எங்க போறான்றதை மட்டும் கண்காணிச்சு எனக்கு சொல்லிட்டே இரு.

லோகேசினி: இப்ப இருக்கிற வீடு ராசி இல்லை. நாளைக்கே வேற வீடு பாத்துப் போயிருவோம்னு சொல்லிட்டு இருக்கார்.

சண்முகநாதன்: அவன் எத்தனை வீடு பாத்தாலும் அந்த வீட்டில் குடியிருக்க போறதில்லை. அதுக்குள்ள அவனை கவனிச்சுருவேன். நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் சேந்திருப்போம். கலங்காம இரு கண்ணு. ஆமா.. மாப்பிள்ளை (முருகன்) பார்சலில் எதையோ வாங்கி வந்தாரே.. என்ன விசேஷமா.. ஏதாவது மல்லிகை பூ, அல்வா வேலையா...

லோகேசினி: சீச்சீ... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அதெல்லாம் நாளாச்சி. கண் வலிக்குதுன்னு சொன்னார். நான்தான் கண்ணுக்கு மருந்து போட்டு விட்டேன். இப்ப நல்லா தூங்குறார்.

சண்முகநாதன்: இதை முன்னாடியே சொல்லி இருந்தா நான் வந்திருப்பேனே... இப்படி பேச்சு நீள்கிறது. இந்த ஆடியோவை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதை முக்கிய சாட்சியாக வைக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வக்கீல் முருகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏற்பாடு செய்து மனைவியே கொலை செய்த சம்பவம் சூளைமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The boyfriend of the wife of advocate C Murugan, who was hacked to death by a gang in Kodambakkam on Monday, surrendered in a judicial magistrate's court in Ponneri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X