For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: சிறுமியை சீரழித்த 17 பேரை கோர்ட்டில் வைத்து சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்!

சென்னையில் அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சிறுமி பலாத்காரம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் 17 பேர் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.

Newest First Oldest First
8:44 PM, 17 Jul

இங்கிலாந்துக்கு 257 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது

8:19 PM, 17 Jul

காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்: வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

4 வருடத்திற்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது

2014, ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கடைசியாக நீர்மட்டம் 100 அடியை எட்டியது

64வது முறையாக நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது

8:19 PM, 17 Jul

அணையின் நீர்மட்டம் 100 அடியானதால் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது

கபினி அணையிலிருந்து 40,416 கனஅடி நீர் திறக்கப்படுகிறது

மொத்தமாக விநாடிக்கு 1,20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது

கர்நாடகாவில் மழை காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

8:05 PM, 17 Jul

பாஜகவின் லோக்சபா தலைமை கொறடாவாக அனுராக் தாகூர் நியமனம்

பிசிசிஐ முன்னால் தலைவராக இருந்தவர் அனுராக் தாகூர்

பாஜகவின் இளைஞர் அமைப்புக்கு தலைவராகவும் இருந்தவர்

ஹிமாச்சல பிரதேசம் ஹமிர்புர் எம்பியாக உள்ளார் அனுராக் தாகூர்

8:00 PM, 17 Jul

வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான் - அமைச்சர் ஜெயக்குமார்

சோதனையில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு

வருமான வரி சோதனையில் அரசை தொடர்புபடுத்தி பேசுவது தவறு

முதல்வர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது - ஜெயக்குமார்

7:37 PM, 17 Jul

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 குற்றவாளிகளும் புழல் சிறையில் அடைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து புழலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்

6:50 PM, 17 Jul

அருப்புக்கோட்டை ஐடி ரெய்டு: 36 மணி நேரம் நடந்த சோதனை முடிவிற்கு வந்தது

அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் சோதனை நடந்தது

எஸ்பிகே நிறுவனம் உட்பட 30 இடங்களில் சோதனை நடந்தது

செய்யாதுரை வீடு உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு

6:31 PM, 17 Jul

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
6:31 PM, 17 Jul

அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு 1986 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும் என அதனை கட்டாயமாக அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வு தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துக்கொண்டு விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கியது.
6:24 PM, 17 Jul

தன்னிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை- ஒப்பந்ததாரர் சுப்பிரமணி மறுப்பு

சுப்பிரமணியிடம் வருமான வரித்துறை விசாரித்ததாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு

6:20 PM, 17 Jul

அருப்புக்கோட்டை ரெய்டு: ஒப்பந்ததாரர் சுப்ரமணியத்திடம் அதிகாரிகள் விசாரணை
6:17 PM, 17 Jul

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் - ஸ்டாலின்

17 குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும் - ஸ்டாலின்

5:44 PM, 17 Jul

காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்: வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியது

இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடியாக உயர வாய்ப்பு

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 64,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது

கபினி அணையிலிருந்து 45,416 கனஅடி நீர் திறக்கப்படுகிறது

மொத்தமாக விநாடிக்கு 1,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது

கர்நாடகாவில் மழை காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

4:59 PM, 17 Jul

17 பாலியல் குற்றவாளிகளுக்காக வக்கீல்கள் ஆஜராக கூடாது

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் பேட்டி

ஆஜராகும் வக்கீல்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்

4:52 PM, 17 Jul

சென்னை மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து பதற்றம்

பலாத்கார குற்றவாளிகளை மீட்டு அழைத்து செல்ல பேச்சுவார்த்தை

தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களுடன் நீதிபதி தருமன் பேச்சுவார்த்தை

4:51 PM, 17 Jul

ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்க- மு.க.ஸ்டாலின்

ரெய்டுகளுக்கு பிறகும் முதல்வர் ராஜினாமா செய்யாதது தமிழகத்திற்கு அவமானம்- ஸ்டாலின்

4:50 PM, 17 Jul

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்

1986ஆம் ஆண்டு அரசாணைப்படி உயர் நீதிமன்றம் உத்தரவு

பணி நேரத்தில் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

3:34 PM, 17 Jul

சிறுமியை சீரழித்த 17 பேருக்கும் கோர்ட்டில் சரமாரி அடி உதை
2:04 PM, 17 Jul

சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேருக்கும் நீதிமன்ற காவல்

மாற்றுத்திறனாளி சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் 17 பேரும் கைது

ஜூலை 31ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்தது சென்னை மகளிர் நீதிமன்றம்

நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் 17 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்

12:54 PM, 17 Jul

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு விழாவில் பங்கேற்கிறார் முதல்வர்
12:20 PM, 17 Jul

ஜூலை 19ல் பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு திரண்டுவர வேண்டும்- அர்ச்சகர் ரமண தீட்சதலு

ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

அர்ச்சகர் ரமண தீட்சதலு பரபரப்பு பேட்டி

11:40 AM, 17 Jul

சென்னையில் மாற்றுத்திறனாளி மாணவி பலாத்காரம்

18 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

செகரடேரியட் காலனியில் 11 வயது பெண்ணை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்கள் கைது

10:51 AM, 17 Jul

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கில் 20ம் தேதி விசாரணை

சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு 20ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

10:49 AM, 17 Jul

வருமான வரித்துறை சோதனையில் ரூ.163 கோடி பணம் பறிமுதல்

100 கிலோ தங்கம் பறிமுதல்- வருமான வரித்துறை தகவல்

செய்யாதுரை மற்றும் அவரது மகன் கார்களில் பெரும்பாலான பணத்தை பதுக்கியதாக தகவல்

10:48 AM, 17 Jul

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிட கூடாது

திமுக தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் கேள்வி

10:24 AM, 17 Jul

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை

பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பொன் ராதாகிருஷ்ணன் கூறக்கூடாது

சென்னை கிண்டியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு தகவல்

8:33 AM, 17 Jul

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1 லட்சம் கனஅடியை தாண்டியது

96000 கனஅடியில் இருந்து 1,00764 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியது

8:33 AM, 17 Jul

செல்பி மோகத்தால் காவிரி வெள்ளத்தில் சிக்கி 2 என்ஜினீயர்கள் பலி

மேகதாது காவிரியாற்றில் செல்பி எடுக்க முயன்றபோது ரகுமான் என்பவர் தவறி விழுந்தார்

ரகுமானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் பவானி சங்கரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

இரண்டு பேரின் உடல்களையும் போலீசார் தேடி வருகின்றனர்

8:33 AM, 17 Jul

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவி 7 மாதத்தில் 15 பேரால் பலாத்காரம்

தாய் அளித்த புகாரின் பேரில் 18 பேர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை அயனாவரத்தில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமிக்கு கொடுமை

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலாளி, பிளம்பர் உள்ளிட்ட 15 பேர் கைது

8:33 AM, 17 Jul

சென்னையில் அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை உட்பட 30 இடங்களில் வருமானவரி சோதனையில் ரூ.160 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல்

அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

READ MORE

English summary
Here are the Tamilnadu today Flash news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X