For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி பிரச்சினை... தமிழகத்தில் இன்று பந்த்!

By Shankar
Google Oneindia Tamil News

கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஏறத்தாழ ஆயிரம் இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 100 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளன.

Leading political parties announced bandh today

சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு காவிரியில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்துக்குத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்தது.

இதற்கு திமுக, காங்கிரஸ், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், "இப்போராட்டத்துக்கு வர்த்தக அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதால், கடையடைப்பு முழு வெற்றி பெறும்.

தஞ்சாவூர் ரயிலடியில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை எழும்பூரில் திமுக அமைப்புச் செயலர் ஆலந்தூர் பாரதி, காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்," என்றார்.

English summary
Tamil Political parties including DMK announced a full fledged bandh all over the state for Cauvery river issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X