For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க வேணா பாருங்க, அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் நான் நல்லா தமிழ் பேசுவேன்.. தோனி

அடுத்த ஐபிஎல் முடிவதற்குள் தமிழில் பேசுவதாக தோனி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் நான் நல்லா தமிழ் பேசுவேன்...தோனி- வீடியோ

    நெல்லை: "நீங்க வேணா பாருங்க. அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் முடியறதுக்குள்ள நான் தமிழில் பேசி விடுவேன்" என்கிறார் தோனி.

    நெல்லையில் கோவை - மதுரை இடையேயான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டினை டாஸ் போட்டு தொடங்கி வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விமானம் மூலம் நெல்லை வந்தார்.

    ஜாலி குளியல்

    ஜாலி குளியல்

    பின்னர், குண்டாறு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்ஸ்-க்கு சென்ற தோனி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தார். தொடர்ந்து, ஜீப்பில் பாதுகாவலர்கள் புடைசூழ மலையில் டிரக்கிங் சென்றார். பின்னர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமி அருவிக்கு சென்று ஜாலியாக ஒரு குளியலையும் போட்டார்.

    இந்தியா சிமெண்ட்ஸ்

    இந்தியா சிமெண்ட்ஸ்

    வழக்கம்போல் ரசிகர்கள் நெல்லையிலும் தோனியை மொய்த்துக் கொண்டனர். கிரிக்கெட் போட்டி முடிந்தபின்பு, தாழையூத்து பகுதியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை அங்கு உருவாக உள்ளது. இதில், தோனி கலந்து கொண்டார்.

    துணைதலைவர் தோனி

    துணைதலைவர் தோனி

    இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன்தான் சூப்பர்கிங்ஸ் அணியின் மையம். அத்துடன் சீனிவாசனும் நெல்லையை சேர்ந்தவர்தான். அதுமட்டும் இல்லை, இந்தியா சிமெணட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் நம்ம தோனி உள்ளார் என்பது தெரிந்த சங்கதிதான். நெல்லை வந்த வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்ட தோனி 'பிடிஐ' செய்தியாளர்களிடம் தன் பயணம் குறித்து பேசும்போது புளகாங்கிதம் அடைந்துள்ளார். தோனி சொல்கிறார்:

    நெல்லை மண் முக்கியமானது

    நெல்லை மண் முக்கியமானது

    "நெல்லை எனக்கு மிகவும் முக்கியமானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாக காரணமாக இருந்த இந்தியா சிமெண்ட்ஸ் உருவான மண் இது. நெல்லையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை உருவாகி உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ரொம்ப வருடங்களாகவே இந்த நிறுவனத்தில் தொடர்பில் உள்ளேன்.

    தமிழில் பேசிவிடுவேன்

    தமிழில் பேசிவிடுவேன்

    அதனால் நெல்லை மண் என் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கும் ஒன்று. அதேபோல, தமிழையும் சீக்கிரமே நான் கற்று கொள்வேன். இப்போதும் கற்று வருகிறேன். அடுத்த சீசன் ஐபில் தொடர் முடியறதுக்குள் நான் தமிழில் பேசிவிடுவேன், பாருங்களேன்" என்றார் தோனி சதம் நம்பிக்கையுடன்.

    ரைட்டு தல.. நெல்லை பாஷையையும், மெட்ராஸ் பாஷையையும் கலந்து கட்டி பேசி அசத்த வாழ்த்துகள்!

    English summary
    'Learn a bit of Tamil' before next IPL: Dhoni
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X