For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் கமல் பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி திரை சரிந்து விழுந்து விபத்து

மதுரையில் கமல் பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி திரை சரிந்து விழுந்து விபத்து

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

மதுரை : மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கமல் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தை ஒளிபரப்புவதற்காக மேடையில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரை சரிந்து விழுந்ததில், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் கமலஹாசன் இன்று மாலை தனது அரசியல் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட இருக்கிறார். இதற்காக மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

 LED Screen fall from ceiling on Kamal dice

இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாலை நடக்க உள்ள இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான மேடை அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கூட்டத்தை சிரமம் இல்லாமல் தொண்டர்கள் காண்பதற்காக மேடையில் 60 அடி நீளமும், 16 அடி உயரமும் கொண்ட எல்.இ.டி திரை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது, காற்றின் வேகம் காரணமாக அந்த எல்.இ.டி திரை திடீரென்று சரிந்து விழுந்தது. இதனால், அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து மீண்டும் அந்த திரையை பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மாலை 6 மணி அளவில் கட்சி பெயர் மற்றும் கொடியை கமல் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
LED Screen fall from ceiling on Kamal dice . Kamal hassan has to announce his party name , flag and policies on today evening in Madurai adn the arrangements are getting ready.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X