For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மேற்கு சிபிஎம் வேட்பாளர் உ.வாசுகி.. உமாநாத்-பாப்பா உமாநாத்தின் மகள்!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் உ.வாசுகி.

தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம் பெற்றுள்ளது. இன்று அக்கட்சி தனது தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார் உ.வாசுகி.

Left parties to release candidate lists today

தமிழகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க பெண் அரசியல் தலைவர்களில் வாசுகியும் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் வாசுகி. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.

மூத்த சிபிஎம் தலைவர் உமாநாத் - பாப்பா உமாநாத்தின் மகள்தான் உ.வாசுகி. 1977-ம் ஆண்டு முதல் சிபிஎம்மில் இணைந்து செயல்பட்டு வருகிறார். வங்கிப் பணியில் முன்பு இருந்தார். பிந்னர் 2000மாவது ஆண்டில் விஆர்எஸ் கொடுத்து விட்டு முழு நேரக் கட்சிப் பணிக்குத் திரும்பினார்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். செக்ஸ் சாமியார் பிரேமானந்தா விவகாரம், சிதம்பரம் பத்மினி பலாத்கார வழக்கு, சிவகங்கை படமாத்தூரில் நடந்த கோக்கோ கோலா நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CPI-M, contesting 25 seats in the May 16 Tamil Nadu Assembly poll, released lists of candidates today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X