For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்க சட்ட நடவடிக்கை தொடங்கியது: செங்கோட்டையன்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Legal action is being taken Jayalalithaa's residence in to memorial: Sengottayan

அதிமுகவின் இரு அணிகள் இணைவது என்பது தொண்டர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. இரு அணிகளும் இணைவதுதான் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி. தீபக் கடிதத்திற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், இரு அணிகள் இணைவதுதான் தொண்டர்கள், மக்களின் எதிர்பார்ப்பு. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே என்றார் அவர்.

English summary
The school education department minister Sengottayan has said that legal action is being taken to change former Chief Minister Jayalalithaa's residence memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X