For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கியது சிறுத்தை.. வால்பாறை மக்களை குலைநடுங்க செய்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிப்பு

வால்பாறை அருகே பெண்ணை கடித்து குதறி தின்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

வால்பாறை: ஒரு பெண்ணை கடித்து குதறி தின்றும், சிலரை காயப்படுத்தியும் வால்பாறை மக்களையே நடுங்க வைத்துக் கொண்டிருந்த சிறுத்தை இன்று கூண்டில் பிடிபட்டது.

வால்பாறை உள்ள சிங்கோணா எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி படுகாயங்களுடன் மாதவி என்ற பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இழுத்து சென்று கடித்தது

அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேரை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. இந்நிலையில், காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் 7 மணி அளவில் கைலாசவதி பெண்ணை இழுத்து சென்று ஒரு வனப்பகுதியிலுள்ள புதரில் வைத்து கடித்து குதறி தின்று கொண்டிருந்தது. பெண்ணை தேடி வந்த பொதுமக்களை கண்டதும் சிறுத்தை தப்பி ஓடியது. பெண்ணின் உடலை பாதி தின்றுவிட்ட நிலையில் மீதமுள்ள உடலை வனத்துறையினர் கைப்பற்றினர்.

ஆர்ப்பாட்டம்-சிறைபிடிப்பு

இது வால்பாறை மக்களை மட்டுமல்லாமல் தமிழக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெண் உயிரிழந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், சிறுத்தைகளை தடுக்க வனத்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்து 300-க்கும் மேற்பட்டோர் பெண்ணின் சடலத்தை எடுக்க விடாமல் வனத்துறை மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அத்துடன் அரசு தேயிலை தோட்ட கழக மேலாண்மை இயக்குனரையும் சிறைபிடித்தனர்.

சிக்கியது சிறுத்தை

இதனையடுத்து, சிறுத்தை நடமாடிய காஞ்சமலை மற்றும் சின்கோனா பகுதியில் 4 இடங்களில் வனத்துறை அதிகாரிகள் கூண்டு அமைத்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்களையும் அதிரடியாக பொருத்தினர். இந்நிலையில், சின்கோனா பகுதியில் வைக்கப்பட்ட ஒரு கூண்டில், இன்று காலையில் ஒரு ஆண் சிறுத்தை சிக்கியது.

தொடர்ந்து கூண்டு வைக்க கோரிக்கை

தொடர்ந்து கூண்டு வைக்க கோரிக்கை

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தாலும், தேயிலை தோட்டப்பகுதிகளில் மேலும் சிறுத்தைகள் இருக்க வாய்ப்பு இருக்கு என்கிறார்கள். எனவே இந்த பகுதிகளில் எல்லாம் கூண்டுகளை எப்போதும் வைக்க வேண்டும் என்றும், அதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
Leopard captured in valparai estate today. But the public demand for the cage to continue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X