• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியல் வாலன்டைன்ஸ் டே.. யாரெல்லாம் கமிட்டட்.. முரட்டு சிங்கிள்ஸ் யாரு.. வாங்களேன் சிரிக்கலாம்!

|

சென்னை: இன்று காதலர் தினம்... எங்கெங்கும் காதல்.. எல்லாப் பக்கமும் காதல்.. அதெல்லாம் தெரியும்.. நீ நேரா மேட்டருக்குள்ள வா.. என்று நீங்க சொல்வது காதில் தேனாக பாய்கிறது!

வர்றேன்.. வர்றேன்.. அதுக்குத்தானே வந்திருக்கேன்.. சமூகமே காதலர் தினம் கொண்டாடும்போது ஏன் நம்ம அரசியல்வாதிகளும் வேலன்டைன்ஸ் டே கொண்டாடக் கூடாது... அரசியலும் அன்புதானே.. அன்பாக இருப்பதும் நல்ல அரசியல்தானே (பாவம் நானே கன்பியூஸ் ஆயிட்டேன் போல!)

காதலர் தினம் நம்மளோட கல்ச்சரே கிடையாது என்று ஒரு குரூப் ஒவ்வொரு ஆண்டும் கிளம்பும். ஊடலும் கூடலும் நம்ம ஊர் கலாச்சாரமாச்சேய்யா என்று கதாகாலேட்சபம் செய்து சொன்னால் கூட ஏற்க மாட்டார்கள்.. அதெல்லாம் கிடையாது.. வார்டன்னா அடிப்போம்.. அதாவது லவ்வர்னா அடிப்போம்னு அடிதடியாகவே வாழ்க்கையை நடத்துபவர்கள் இவர்கள்!

விட்டெறிங்க விட்டெறிங்க "ராசா".. வந்தா "ரோஸா".. இல்லாட்டி ஜெய் "கைலாஸா".. நோ சூடு நோ சொரணை.. நித்தி போட்ட போடு!

மொத்தம் 3 வெரைட்டி

மொத்தம் 3 வெரைட்டி

கமிட்டெட் மற்றும் முரட்டு சிங்கிள்ஸ் என இருப்பது போல அரசியலிலும் சிலர் உள்ளனர். சிலர் தீவிர காதலுடன் அரசியலில் ஈடுபட்டு கலக்கிக் கொண்டுள்ளனர். சிலர் கட்டாயக் கல்யாணம் செய்தவர்கள் போல கஷ்டப்பட்டு வாழ்க்கையை (அரசியலில்) தள்ளிக் கொண்டுள்ளனர். சிலரோ ஏரியாவுக்குள்ளேயே நுழையாமல், கிடைத்த வாய்ப்புகளையும் தவற விட்டு விட்டு 90ஸ் கிட்ஸ் போல முரட்டு சிங்கிளாகவே காலம் தள்ளிக் கொண்டுள்ளனர்.

தீராக் காதல்

தீராக் காதல்

தீவிரக் காதலுடன் இருப்பவர்கள் பட்டியலைப் போட்டால் அது மிகப் பெரிய லிஸ்ட் பாஸ்.. எடப்பாடி பழனிச்சாமியில் ஆரம்பித்து அப்படியே மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான் என நீண்டு கொண்டே போகும். இவர்களெல்லாம் படு ஜாலியாக அரசியலில் இருந்து கொண்டிருப்பவர்கள். தீவிர அரசியல்வாதிகள். அரசியலை அனுபவித்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.

கட்டாயக் கல்யாணம்

கட்டாயக் கல்யாணம்

இன்னும் சில தலைவர்கள் உள்ளனர். இவர்கள் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தவர்கள் போல ஒரு விதமான நெருக்கடியுடனேயே பயணித்துக் கொண்டிருப்பவர்கள். ஜி.கே.வாசன், தினகரன், மு.க.அழகிரி, சரத்குமார்.. இப்படி சிலரை லிஸ்ட்டில் போடலாம். இவர்கள் அரசியலில் இருப்பவர்கள்தான். ஆனாலும் சுயாதீனமாக எதுவும் செய்ய முடியாமல் ஒரு விதமான இறுக்கத்துடன் வலம் வரும் தலைவர்கள். எப்போதும் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இளம் காதலர்கள்

இளம் காதலர்கள்

இன்னொரு தலைவர்கள் கூட்டம் இருக்கிறது. இவர்கள் இளம் காதலர்கள் போல. பெரிய அளவில் கமிட்மென்ட் இருக்காது. ஆனாலும் கமிட் ஆனது போலவே காட்டிக் கொண்டு களம் புகுந்து கலக்குபவர்கள். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை இதில் சேர்க்கலாம் (இவர்தாங்க 80ஸ் கிட்ஸின் காதல் நாயகன்). அதேபோல மேலும் சில குட்டித் தலைவர்கள் உள்ளனர். இவர்களும் தமிழக அரசியல் களத்தை அவ்வப்போது கலக்கிக் கொண்டுதான் உள்ளனர்.

முரட்டு சிங்கிள்ஸ்!

முரட்டு சிங்கிள்ஸ்!

இவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் அரசியலில் கமிட் ஆனவர்கள். ஆனால் இன்னொரு குரூப் இருக்கிறது. அதுதாங்க நம்ம முரட்டுக் காளை.. சாரி முரட்டு சிங்கிள்ஸ். இவர்கள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், கடைசி வரை ஏதாவது ஒரு தயக்கத்துடனேயே இருப்பவர்கள்.. அதாவது 90ஸ் கிட்ஸ் போல.. அதில் முக்கியமானவர்.. வேற யாரு.. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். கமிட் ஆகாமலேயே தொடர்ந்து அரசியலில் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வரும் ஆண்டிலாவது கமிட் ஆவாரான்னு பார்ப்போம்!

பிறகு எல்லோருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்.. என்ஜாய் பண்ணுங்கபா!

 
 
 
English summary
We can celebrate Valentines day in Politics too, let us see who and all are coming in which category.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X