For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலமைப்பு சாசனபடியே எம்எல்ஏக்கள் நியமனம்- கிரண்பேடி

அரசியலமைப்பு சாசனபடியே எம்எல்ஏக்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    புதுவையில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் : சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு

    புதுவை: புதுவையில் 3 நியமன எம்எல்ஏக்கள் அரசியல் சாசன விதிகளின் படியே நியமனம் செய்தேன் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

    பாஜகவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு பரிசீலனை செய்து வந்தது. ஆனால் இதற்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புக் கொள்ளவில்லை.

    Lieutenant Governor Kiran Bedui says about nominated MLAs appointment

    இதனால் கிரண்பேடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கண்ட மூவரையும் அழைத்து அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து நியமனம் செய்தார். இதை எதிர்த்து புதுவை அரசு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.

    அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறுகையில் அரசியலமைப்பு சாசன விதிகள்படியே எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    உயர்நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்தி உள்ளது என்றார் கிரண்பேடி.

    English summary
    Pondicherry Lieutenant Governor Kiran Bedi says that nominated MLAs appointment have done only on following constitutional provisions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X