For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகள் மூடப்படும்: கனிமொழி உறுதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சேலம்: திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகள் மூடப்படும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சேலத்தில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

 Liquor plant will close after DMK came to power: kanimozhi

அப்போது அவர் பேசுகையில், சொன்னதை செய்பவர்தான் திமுக தலைவர் கருணாநிதி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மக்களைச் சந்தித்து வருகிறார். ஆனால், திமுக தலைவரோ மக்களுக்காக உழைக்கக் கூடியவர். அவர் உங்களைக் காண ஓடோடி வருபவர்.

அதேபோல, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாவட்டம்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறார். மக்களைக் காண ஓடோடி வரும் தலைவர் வேண்டுமா அல்லது தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திக்கும் தலைவர் வேண்டுமா என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏதாவது செய்தாரா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியின் போது ரூ.7,000 கோடி கடன் ரத்து செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 6,800 மதுக்கடைகள் திறந்ததுதான் சாதனையாக உள்ளது.

திமுக ஆட்சியில் ரூ.16,000 கோடியாக இருந்த மதுக்கடை வருவாய், அதிமுக ஆட்சியில் ரூ.36,000 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துவிட்டதால், குடிக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகள் மூடப்படும்.

தொழில் துறையில் தமிழகம் இந்திய அளவில் 20-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. எனவே, அனைத்து துறைகளும் வளர்ச்சிபெற ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார் கனிமொழி

English summary
DMK MP kanimozhi said, Liquor plant will close after DMK came to power
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X