For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிசம்பர் 15ம் தேதி வரை இங்கெல்லாம் நீங்க பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தலாம்!

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த பட்டியல் இதோ.

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டை சில சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் சலுகை அளித்துள்ளது. அப்படி சலுகை அளிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த விவரம்:

List of the services govt permitted to use Rs 500 notes
  • டோல் கேட்டுகள் மற்றும் பெட்ரோல் பங்குகள்
  • மத்திய, மாநில அரசு, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில ரூ. 2000 வரை கல்விக் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
  • மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.
  • ரூ. 500 வரைக்கும் செல்போன்களில் டாப்அப் செய்து கொள்ள பயன்படுத்தலாம்.
  • நுகர்வோர் கூட்டுறவுக் கடைகளில் உரிய அடையாள அட்டைகளைக் காட்டி ரூ. 5000 வரை பொருட்களை வாங்கும்போது இந்த பழைய நோட்டுக்களைப் பயன்படுத்தலாம்.
  • மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகளில் பால் வாங்க பயன்படுத்தலாம்.
  • குடிநீர், மின்சாரக் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தலாம்.
  • அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பயன்படுத்தலாம்.
  • மருத்தவர்களின் சீட்டுடன் அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்து வாங்க பயன்படுத்தலாம்
  • ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கவுண்டர்களில் டிக்கெட் வாங்கப் பயன்படுத்தலாம்.
  • விமான நிலையங்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
  • மயானங்கள் இடுகாடுகளில் பயன்படுத்தலாம்.
  • காஸ் சிலிண்டர்களை வாங்கப் பயன்படுத்தலாம்.
  • ரயில்களில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தலாம்.
  • புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம்.
  • இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் நினைவிடங்களில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம் (மாமல்லபுரம் போல)
  • மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் கட்டணங்கள்,வரிகள், அபராதங்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட பயன்படுத்தலாம்.
  • கோர்ட் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.
  • அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க பயன்படுத்தலாம்.
English summary
The union govt has permitted to use old 500 rupees currency notes in some utility services till December 15. Here is the list of the services.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X