For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதய கோளாறால் நீலநிறமாக மாறிய பெண் குழந்தை... கண்ணீர் வடிக்கும் தந்தை.. கொஞ்சம் உதவுங்களேன்

இதய கோளாறால் பாதிக்கப்பட்டு நீலநிறமாக மாறிய கனிஸ்ரீ என்ற பெண் பெண் குழந்தைக்கு சிகிச்சை செய்ய கொஞ்சம் உதவுங்கள்.

சென்னை: இதய கோளாறால் பாதிக்கப்பட்டு நீலநிறமாக மாறிய கனிஸ்ரீ என்ற பெண் பெண் குழந்தைக்கு சிகிச்சை செய்ய கொஞ்சம் உதவுங்கள்.

எல்லா குழந்தைகளையும் போல கனிஸ்ரீயும் பிறக்கும் போது அவர்களின் பெற்றோரால் சந்தோஷப்பட முடியவில்லை. காரணம் கனிஸ்ரீ பிறக்கும் போதே இதயக் கோளாறுடன் அவள் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததுதான். டாக்டர்கள் இதை சொன்னவுடன், இந்த நிலையை கேட்டதும் அவர்களின் பெற்றோரால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மனம் நொறுங்கிப் போன நிலையில் அப்படியே வாழ்க்கையை வெறுத்து இடிந்து போய்விட்டார்கள்.

கனிஸ்ரீ 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிறந்தாள். பிறந்து 22 நாட்களே ஆன சமயத்தில் அவளுக்கு போலியோ தடுப்பு ஊசி போட்டனர். அப்பொழுது அவளின் இருதய துடிப்பை கண்காணித்த மருத்துவர் இதயத் துடிப்பு சீராக இல்லை. உடனே ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்து விடலாம் என்றார்.

இந்த சமயத்தில் தான் அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் ஒரு மருத்துவ முகாமை ஏற்படுத்தி இருந்தது. கனிஸ்ரீ அப்பா அவளை ஒரு மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து, சிகிச்சைக்காக அனுமதித்தார். இதற்காக ஆகும் செலவு மிகவும் அதிகம். அப்பொழுது தான் கனிஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். உங்கள் மகள் 22 நாட்களாக உயிருடன் இருப்பதே பெரிய விஷயம். அவள் பிறந்ததிலிருந்து இன்று வரை தன் வாழ்நாளுடன் போராடிக் கொண்டு இருக்கிறாள். இதயத்தில் பெரிய பாதிப்பு உள்ளது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

அவளுக்கு ஃபோலட் ஹைப்போ பிளாஸ்டிக் பிவி என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது சுத்தமான இரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்வதில் இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் உடம்பு முழுவதும் அசுத்தமான இரத்தம் பாய்வதால் அவள் உடல் நீல நிறமாகி விட்டது. இப்பொழுது கனிஸ்ரீக்கு ஒரு வயது. ஒரு வருடத்திற்கு அவளது அறுவை சிகிச்சை தள்ளிப் போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் வலியாலும் வேதனையாலும் அந்த பிஞ்சு குழந்தை சாப்பிடக் கூட முடியாமல் தவித்து வருகிறாள். அதைப் பார்க்கும் அவளுடைய பெற்றோர் தினம்தினம் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவளின் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள் கடந்த வருடமே அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்றனர். ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாமல் தன் குழந்தையின் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அல்லாடி வருகிறார் கனிஸ்ரீயின் தந்தை. இப்பொழுதும் அவளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அவளின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

கடந்த ஒரு வருடமாக அவளின் இதயம் மாத்திரை மருந்துகளைக் கொண்டு மட்டுமே செயல்பட்டு வந்தது. இதற்காக ராஜேஷ் கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வரை செலவழித்துள்ளார். ஆனால் இப்பொழுது இந்த அறுவை சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஒரு சாதாரண பார்பர் ஷாப்பில் வேலை பார்க்கும் ராஜேஷ்க்கு இந்த பணத்தை பிரட்டுவது என்பது மிகவும் சிரமமான விஷயம். அதனால் அவர் நம்மளின் உதவியை நாடுகிறார்.

"நான் ஒரு பார்பர் ஷாப்பில் வேலை செய்பவன். எனது வருமானம் மிகவும் சிறிய தொகையே. எனது மனைவியும் வேலைக்கு செல்லவில்லை. கடந்த ஒரு வருடங்களாக நாங்களும் என் குழந்தையும் மருத்துவமனையும் வீடுமாகத் தான் அலைந்து வருகிறோம். கனிஸ்ரீ யை நினைக்கும் போது எனக்கு தூக்கம் கூட வருவதில்லை. என் வேலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அவள் படும் வேதனையைப் பார்க்கும்போது ஒரு தந்தையாக எனக்கு கண்ணீர் தான் வருகிறது. என் குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று போராடிக் கொண்டு இருக்கிறேன்." என்று அழுது தவிக்கிறார்.

இவர்களுக்கு உதவி செய்ய என்று அதிகமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என யாரும் இல்லை. இருப்பினும் ராஜேஷ் தன்னால் முடிந்த வரை முயன்று வருகிறார். இப்பொழுது அவர் நம்மிடம் உதவியை நாடியுள்ளார். அவரின் செல்ல மகளை காப்பாற்ற அவருக்கு நாமும் உதவுவோம். நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி ஒரு உயிரை காக்கட்டுமே. உயிர் காக்க உதவி செய்வோம்! நமக்கு நல்ல இதயம் இருந்தால், மற்றொரு பிஞ்சு இதயத்தை உயிர்ப்பிக்கச் செய்ய முடியும்தானே!

உதவி செய்ய விரும்புவோர் இந்த வங்கிக் கணக்கில் அதைச் செய்யலாம்:

NEFT/IMPS/RTGS transfer to the following account:
(From Banks in India only)

Account number: 700701707099692
Account name: Baby Kanisri
IFSC code: YESB0CMSNOC
(The digit after B is Zero and the letter after N is O for Orange)

அல்லது

For UPI Transaction: supportkanisri@yesbankltd

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X