For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த குமாரசாமிக்கு பாஜகவினர் கருப்புக் கொடி

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்த குமாரசாமிக்கு பாஜகவினர் கருப்புக் கொடி காட்டினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த குமாரசாமி-வீடியோ

    ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்த குமாரசாமிக்கு உள்ளூர் பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர்.

    கர்நாடகத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சிக்கு அதிகாரத்துக்கு போட்டி ஏற்பட்டது. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

    Local BJP cadres shows black flag for Kumarasamy in Srirangam

    இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குமாரசாமியை ஆளுநர் அழைத்தார்.

    குமாரசாமி நாளை மறுதினம் முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் அவர் நேற்றைய தினம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனத்துக்காக வந்தார்.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டு இரு மாநிலத்துக்கு இடையே நதி நீர் பங்கீட்டில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர். நல்ல தீர்வு கிடைக்க நான் முயற்சிக்கிறேன் என்று குமாரசாமி தெரிவித்தார்.

    பின்னர் வெளியே வந்த போது அங்குள்ள உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர். இதைத் தொடர்ந்து பாஜகவினரை அங்கு வந்த போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    English summary
    Local BJP waves black flags for Kumarasamy who visits Srirangam Ranganathar temple yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X