For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது பொது சின்னம்.. என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு "கரும்பு விவசாயி" சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் "கரும்பு விவசாயி" சின்னத்தைப் பொதுச் சின்னமாக வழங்கி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

local body election: Naam Tamilar party gets “Sugarcane Farmer” symbol

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில், கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டியது கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களின் முழுமுதற் கடமையாகும்.

அதனடிப்படையில் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து, கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் களம் காண வேண்டும் எனவும், வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப்பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
In the local body election Naam Tamilar party gets “Sugarcane Farmer” symbol from the election commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X