For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள்!

கொங்கு மண்டலத்தில் திமுக அதிரடி காட்டி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக... பரபர தகவல்

    சென்னை: அதிமுகவின் இரும்பு கோட்டையான கொங்கு மண்டலத்தை திமுக ஜஸ்ட் மிஸ் தவற விட்டுள்ளது. அதேசமயம், தப்பிப் பிழைத்து அதிமுக அதிக இடங்களை அள்ளியுள்ளது. காலங்காலமாக அதிமுகவின் பிடியில் உள்ளது கொங்கு மண்டலம். இந்த முறை அங்கு பெரும் ஓட்டையைப் போட்டு விட்டது திமுக!!

    அந்த வகையில் அதிமுகவினருக்குக் கொண்டாடக் கூடிய வெற்றியை கொங்கு மக்கள் தரவில்லை என்பது அக்கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியாகும்.

    கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள்.

    உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 'மெர்சல்' வெற்றி- 2011 ஐவிட கூடுதல் இடங்கள்! உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 'மெர்சல்' வெற்றி- 2011 ஐவிட கூடுதல் இடங்கள்!

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    பொதுவாக கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் ரசிகர்களும்கூட. அதனால்தான் அங்கு அதிமுக வெற்றி என்பது இவ்வளவு காலமாக எளிதாக நடக்கக்கூடிய விஷயமாக இருந்தது.. வீட்டுக்கு வீடு சாமி படத்துடன் எம்ஜிஆர் படத்தையும் சேர்த்தே வைத்திருப்பார்கள் இவர்கள். எம்ஜிஆருக்கு பிறகு கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார் ஜெயலலிதா!

    எம்ல்ஏக்கள்

    எம்ல்ஏக்கள்

    போன சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.. இதுதான் அதிமுக ஆட்சி அமையவும் முக்கிய காரணமாகிவிட்டது.. இதற்கு பிறகுதான் எடப்பாடியார் முதல்வராக வர நேர்ந்தது.. இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை.

    3 ஆண்டுகளாக திட்டமிட்டும்... குழப்பமோ குழப்பம்... ஆணையம் மீது சீறும் ஆசிரியர்கள்3 ஆண்டுகளாக திட்டமிட்டும்... குழப்பமோ குழப்பம்... ஆணையம் மீது சீறும் ஆசிரியர்கள்

    செங்கோட்டையன்

    செங்கோட்டையன்

    முதல்வர் மட்டுமில்லை.. முக்கிய அமைச்சர்களான செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, தங்கமணியை தந்ததும் இதே கொங்கு மண்டலம்தான்.. ஜெயலலிதா மறைந்த பிறகு அதற்கான ஒரு வாய்ப்பு தெரிந்தோ, தெரியாமலோ கிடைத்துவிட்டது. ஆனால், அந்த செல்வாக்கும் தற்போது சரிய துவங்கிவிட்டது. இந்த சரிவு போன எம்பி தேர்தலிலேயே ஆரம்பித்துவிட்டது.. அதிமுகவாகட்டும், அதன் கூட்டணி கட்சியாகட்டும் கொங்கு மண்டலத்தில் ஒரு இடத்தில் கூட யாரும் வெற்றி பெறவில்லை. இந்த சந்தர்ப்பத்தை திமுக அப்போது மிக அழகாகவும், சாமர்த்தியமாகவும் கைப்பற்றி கொண்டது.. இத்தனைக்கும் கொங்கு மண்டலத்தில் அதிமுக ஏராளமான நலத்திட்டங்களை அள்ளி வழங்கி இருந்தது!

    ஊராட்சி ஒன்றியம்

    ஊராட்சி ஒன்றியம்

    இப்போது பஞ்சாயத்து தேர்தலிலும் திமுகவின் கை ஓங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவுக்கு 456 இடங்கள் கிடைத்துள்ளன. திமுகவுக்கு 446 இடங்கள் கிடைத்துள்ளன. இதுவே திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றிதான். அதாவது ஜஸ்ட் 10 இடங்கள்தான் அதிமுகவை விட குறைவாக பெற்றுள்ளது திமுக. திண்டுக்கல்லில் அக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. நாமக்கல்லிலும் வெளுத்து வாங்கியுள்ளது.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று கூற முடியாத அளவுக்கு அடித்தளத்தை தகர்த்துள்ளது திமுக. இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சிதான். அதிமுகவின் செல்வாக்கு சரிய துவங்கி உள்ளது... மேலும் தோற்று போனது புதுமுகங்களும் இல்லை.. அவர்களில் பெரும்பாலானோர், முக்கிய புள்ளிகள், பிரபலங்கள், அவர்களின் வாரிசுகள் என்பதுதான் பெருத்த அதிர்ச்சி.. ஆக மொத்தம்.. இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் கை ஓங்கியுள்ளது என்பதை உரக்க சொல்லலாம்!!

    Take a Poll

    English summary
    local body election result: sources say that dmk wins in kondu mandalam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X