• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குமரியில் முளைத்த முதல் வித்து.. சுயம்புன்னு சொல்வாங்களே.. அது சாட்சாத் சீமான்தான்!

Google Oneindia Tamil News
  ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

  சென்னை: சுயம்பு என்று சொல்வார்களே.. அது சாட்சாத் சீமான்தான்.. 10 வருடங்கள் போராட்டத்தில் முதல் வித்து.. கன்னியாகுமரியில் வேரூன்றி முளைக்க தொடங்கி உள்ளது!

  2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவு எண்ணப்பட்டன.. மொத்தமுள்ள 5090 ஒன்றிய உறுப்பினர்களில் அதிமுக கூட்டணி 926 இடங்களிலும், திமுக கூட்டணி 1078 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

  இதில், நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சுனில் என்பவர்தான் வாகை சூடியுள்ளார்... 10 வருட கால அரசியலில் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இதுதான்.. ஒவ்வொரு தேர்தலின்போதும் தோல்வியை தழுவினாலும் ஒரு தேர்தலையும் தவிர்த்துவிடாமல் துணிந்து வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான்.

  தேர்தலில் அரை சதம் அடித்த தேனியின் தோனி.. ஓ.பி.ஆருக்கு கூடும் மவுசு.. புதிய பவர் சென்டர் ஆகிறாரா? தேர்தலில் அரை சதம் அடித்த தேனியின் தோனி.. ஓ.பி.ஆருக்கு கூடும் மவுசு.. புதிய பவர் சென்டர் ஆகிறாரா?

  அரசியல் களம்

  அரசியல் களம்

  ஆனால் 10 வருடமாக உள்ள ஒரு கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதை பெரும் பின்னடைவாகவே அரசியல் களத்தில் பார்க்க தொடங்கி உள்ளனர்.. இது விமர்சிக்கப்பட்டும் வருகிறது.. மக்கள் மத்தியில் இந்த கட்சி வரவேற்பை பெறவில்லை என்றும் சொல்ல தொடங்கி உள்ளனர்.. ஆனால் இந்த வெற்றியை நாம் இந்த கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்துவிட முடியாது!

  பிடிமானம்

  பிடிமானம்

  எந்த தேர்தலாக இருந்தாலும் சரி.. அதிமுக, திமுக என்ற ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில் நுழைந்து தில்லாக போட்டியில் குதிக்கும் தில் கட்சிதான் நாம் தமிழர் கட்சி. "என் மக்களை நம்பி என் கருத்தியலை நான் விதைக்கிறேன்.. முளைத்தால் மரம்.. இல்லையேல் மண்ணுக்கு உரம்" என்பதுதான் சீமானின் ஆரம்பம் முதல் இப்போது வரை உள்ள பிடிமானம்!

  பாதை

  ஒவ்வொரு கேள்விகளையும், ஒவ்வொரு பிரச்சினையையும் ஆழமாக வேரூன்றியே யோசிக்கும் சீமான்.. தன்னுடைய பிரச்சாரங்களிலும் இதனை காட்டமாகவே எடுத்து வைத்து வருகிறார்.. தனக்கென்று ஒரு பாதை வகுத்து கொண்டாலும், அதை சந்தர்ப்பவாதத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தியது இல்லை. "சீமான் நல்லாதான் பேசறாரு.. நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்லாதான் கேள்வி கேட்கிறாரு.. ஆனாலும் இவரை நம்பலாமா? நம்பப்படாதா?" என்று இவரை பற்றின ஒரு சந்தேகம் மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாதுதான்.

  என்னது என் அப்பா ஜெயிச்சுட்டாரா.. உற்சாகத்தில் துள்ளி குதித்த மகன்.. நெஞ்சு வலித்து பரிதாப மரணம் !என்னது என் அப்பா ஜெயிச்சுட்டாரா.. உற்சாகத்தில் துள்ளி குதித்த மகன்.. நெஞ்சு வலித்து பரிதாப மரணம் !

  பிரச்சாரங்கள்

  ஆனால், "நாங்கள் உங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல, அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைக்கானவர்கள்" என்பதை சீமான் தன்னுடைய கடைசி நேர பிரச்சாரங்களிலும் பதித்துவிட்டுத்தான் போனார். சீமானின் பிரச்சாரம் எப்போதுமே மிகப் பெரிய வீச்சை கொண்டிருக்கும். ஆளும்தரப்பு, எதிர் தரப்பு, என யாரையுமே விட்டு வைப்பதில்லை இவர்!

  3-வது இடம்

  மக்களை கவர்ந்தது மட்டுமல்ல, யோசிக்க வைக்க கூடியதும் சீமானின் பேச்சுக்கள்தான். திராவிட கட்சிகளே பலமுறை அரண்டு போயின சீமானின் பேச்சில்! பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டதுதான், சீமானை கடந்த எம்பி தேர்தலின் போது மட்டுமல்ல.. இந்த பஞ்சாயத்து தேர்தலிலும் 3-வது இடத்துக்கு அரசியலில் கொண்டு வந்து உயர்த்தி உள்ளது.

  துணிச்சல்

  அதிமுக, திமுகவின் பெரும் கூட்டத்தைக் கண்டு இவர்கள் மிரளவில்லை.. அவர்களின் பண பலத்தைக் கண்டு நடுங்கவில்லை.. வெறும் மக்களையும், தங்கள் கொள்கையையும் மட்டுமே நம்பி களம் கண்டு வருபவர்கள்.. இந்த துணிச்சல் பாப்புலர் அரசியல்வாதியான கமலுக்கு கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

  அறிகுறி

  மக்களுக்கும், மண்ணுக்கும், மரத்துக்கும், மலைக்கும் கூட போராடி கொண்டிருக்கும் சீமானின் விழுதுகள் இன்று பெருமளவு உருவாக தொடங்கிவிட்டனர்.. யாருமே சொல்லாமல், மக்கள் பிரச்சனைகளை இக்கட்சியினர் தாமாக முன்வந்து எடுத்து செய்வதால்தான், சீமான் மக்களிடம் எந்நேரமும் நெருங்கியே இருக்கிறார்... இதன் அறிகுறிதான் குமரியில் தென்பட துவங்கி உள்ளது!

  English summary
  local body election result: naam thamilar party candidate sunil win near kanniyakumari
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X