For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணைய இணையத்தில்.. பாமக பெயரையே காணோமே.. தேமுதிக பெயரெல்லாம் இருக்கே.. கட்சி தொண்டர்கள் ஷாக்!

கொங்கு மண்டலத்தில் திமுக அதிரடி காட்டி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ஆணைய இணையத்தில் விடுபட்டு போன பாமகவின் பெயர்

    சென்னை: சுத்தம்.. பாமக பெயரையே காணோமாம்.. தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பாமகவின் பெயர் இல்லாததுதான் இப்போது பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

    அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது.. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தன்னுடைய மகத்தான ஆதரவையும் தந்தது.. பிரச்சாரத்திற்கும் பாமக தலைவர்கள் வந்து போனார்கள்.

    இப்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டன.. இந்த 2 தினங்களாகவே அதிமுக, திமுக பெயர்கள்தான் மாறி மாறி அடிபட்டு கொண்டிருக்கிறதே தவிர, பாமகவின் பெயர் அவ்வளவாக உச்சரிக்கப்படவில்லை.

    அட.. அமமுகவா இப்படி!.. சத்தமின்றி வேலை பார்த்த டிடிவி தினகரன்.. எதிர்பார்த்ததை விட செம ஆதரவு! அட.. அமமுகவா இப்படி!.. சத்தமின்றி வேலை பார்த்த டிடிவி தினகரன்.. எதிர்பார்த்ததை விட செம ஆதரவு!

    வாக்கு விகிதம்

    வாக்கு விகிதம்

    அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, அந்த கட்சியின் வாக்கு விகிதம், வெற்றி, தோல்விகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. அதுபோலவே தேமுதிகவின் விவரங்களும் வந்துள்ளன. ஆனால் பாமக சம்பந்தப்பட்ட செய்திகள் குறைவாகவே வந்துள்ளன. இதனால் பாமக தொண்டர்கள் குழப்ப நிலைக்கு போனார்கள். சேலம் அருகே வெறும் வெறும் நான்கே ஓட்டுகளில் பாமக வேட்பாளர் முனுசாமியை சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தோற்கடித்த சம்பவம் நடந்து அக்கட்சியினரின் வயித்தெறிச்சலை கொட்டி கொண்டுள்ளது..

    பெயரே இல்லை

    பெயரே இல்லை

    இதன்பிறகுதான் தெரிந்தது, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பாமகவின் பெயரே இல்லை என்பது.. இது பாமகவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. காரணமும் சரியாக தெரியவில்லை... மக்களுக்கு கொஞ்சம் கூட தெரியாத, அறிமுகமாகாத தேசிய மக்கள் கட்சின்னு ஒரு கட்சியோட பெயர் கூட இருக்கிறது.

    பிரதான கட்சிகள்

    பிரதான கட்சிகள்

    அதுபோலவே கூட்டணியில் உள்ள தேமுதிக பெயர் உள்ளது.. மாற்று கட்சி கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் பெயர் உள்ளது.. காங்கிரஸ் பெயரும் இருக்கிறது.. ஆனால், பாமக பெயர் இல்லை... அதேபோல மதிமுகவின் பெயர் இல்லை, நாம் தமிழர் கட்சி பெயரும் இல்லை.. பாமக, மதிமுக, நாம் தமிழர்.. இந்த 3 கட்சிகளுமே தமிழகத்தின் பிரதான கட்சிகள்.. இந்த கட்சிகளுக்கென்று லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.

    82 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்... பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது தேமுதிக82 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்... பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது தேமுதிக

    குளறுபடி

    குளறுபடி

    ஆனால், இணையதளத்தில் இந்த கட்சிகளின் பெயர் இல்லாதது ஏன் என்பது குழப்பமாகவே உள்ளது. ஏதேனும் தொழில்நுட்ப குளறுபடி காரணமாக இருக்குமா என்றும் விளங்கவில்லை.. இதில் ஏதாவது ஒரு தெளிவு கிடைத்தால் இந்த கட்சிகளின் தொண்டர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றே தெரிகிறது.

    English summary
    local body election result: there is no PMK name in election commission english website
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X