For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதை விடுங்க.. காங்கிரஸை பாருங்க.. இந்த பக்கம் பாஜகவை தூக்கி அடிச்சு கலக்கிட்டிருக்கு!

பாஜகவை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று அசத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: என்னதான் திராவிடக் கட்சிகள் ஒரு பக்கம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாலும்.. இன்னொரு பக்கம் தேசியக் கட்சிகள் சத்தம் போடாமல் ஒரு சண்டையில் இறங்கியுள்ளன.

ஆனால் இந்த சண்டையில் ஜெயித்தது என்னவோ காங்கிரஸ்தான். பாஜக பின்னாடி போய் விட்டது. இரு கட்சிகளும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. இரு கட்சிகளுமே பெரிய அளவிலான இடங்களில் போட்டியிடவில்லை. இடங்கள் கம்மிதான்.

கொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள்! கொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள்!

 கலக்கிய காங்கிரஸ்

கலக்கிய காங்கிரஸ்

இந்த நிலையிலும் கூட காங்கிரஸ் கலக்கி விட்டது. பாஜகதான் பின்னாடி போய் விட்டது. அதாவது ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சிதான் அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் திமுக கூட்டணிக்கட்சியினர் சிறப்பான முறையில் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளனர் என்று தெரிகிறது.

 முட்டி மோதல்

முட்டி மோதல்

இரு கட்சிகளுமே குறைந்தபட்ச இடங்களையே தேசியக் கட்சிகளுக்குக் கொடுத்தன. ஆனாலும் முட்டி மோதி போட்டியிட்டன. இதில் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது திமுக கூட்டணியினரை மகிழ்வித்துள்ளது. காரணம் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் போகாமல் தடுத்து விட்ட திருப்தி திமுகவினர் மத்தியில் உள்ளது.

அந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ

 காங்கிரஸ் முன்னணி

காங்கிரஸ் முன்னணி

இதுவரை அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி 90 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், பாஜகவுக்கு வெறும் 48 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. இது காங்கிரஸாரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 பாஜகவை விட மேல் காங்கிரஸ்

பாஜகவை விட மேல் காங்கிரஸ்

இந்த தேர்தல் மூலம் இன்னொரு விஷயத்தையும் தேசியக் கட்சிகள் மக்களுக்கு உணர்த்தியுள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்துள்ளது. அதேசமயம், பாஜகவுக்கு வாக்கு வங்கி என்பது திராவிடக் கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே பெருகும். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகம் வாங்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதிமுகவின் நிழலில் இணைந்து போட்டியில் ஓடியதால்தான்!

English summary
local body election resul: congress win in 90 seats, and bjp got 48 only
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X