For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆமா.. செங்கல்பட்டு ரோட்டில் நைட் ஒன்னு போச்சே.. அது என்ன.. காட்டு "பூனை"யா இல்லை.. "அது"வா??

செங்கல்பட்டு ரோட்டில் நடமாடியது சிறுத்தையா என மக்கள் பீதியில் உள்ளனர்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரோட்டில் நடமாடியது பூனையா? சிறுத்தையா? என்பதுதான் அம்மாவட்ட மக்களின் இப்போதைய அச்சமே.. இது சம்பந்தமான சிசிடிவி காட்சி வெளியாகி மேலும் பீதியை கிளப்பி விட்டுள்ளது!

Recommended Video

    செங்கல்பட்டு ரோட்டில் சிறுத்தை நடமாட்டமா? கிலியை கிளப்பிய சிசிடிவி காட்சிகள் - வீடியோ

    செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர், அலமேலுமங்காபுரம், திருவடிச்சூலம், இருங்குன்றப்பள்ளி, வேண்பாக்கம் போன்ற பகுதிகள் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ளவை.. இந்த பகுதிகளில் 6 வருஷமாக சிறுத்தை நடமாடுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

    அதனால் பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க வனத்துறையினரும் கூண்டுகளை வைத்தனர்.. நவீன சிசிடிவி கேமிராவையும் பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தபடியே வந்தனர்.

    தற்காலிக பணி

    தற்காலிக பணி

    அதனால்

    சிறுத்தை

    சிறுத்தை

    எனினும் கேமிராவில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாட்டம் கேமிராவில் பதிவாகி உள்ளது.. அலமேலுமங்காபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிறுத்தை போன்ற ஒன்று மகேந்திரா சிட்டி தொழிற்பூங்காவுக்கு செல்லும் மெயின் ரோட்டில் நடந்து செல்கிறது.

    பீதி - கலக்கம்

    பீதி - கலக்கம்

    இந்த மஹிந்திரா வேல்டு சிட்டியில் சுமார் 50,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைபார்த்து வருகிறார்.. இந்த தொழில் பூங்கா அருகில்தான் அஞ்சூர் வனப்பகுதி உள்ளது. இப்போதைக்கு ஊரடங்கு உள்ளதால் அந்த பகுதியில் யாருமே நடமாடவில்லை.. இந்த விலங்கு ஹாயாக நடந்து செல்லும் இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியானது.. ஏற்கனவே பயந்து போன மக்கள், இந்த வீடியோவை பார்த்ததும் மேலும் பீதி அடைந்தனர்.

    ஆய்வு

    ஆய்வு

    6 வருஷத்துக்கு முன்னாடி நடமாடின சிறுத்தையா இது? ஒருவேளை சிறுத்தை குட்டியா?ன்னு தெரியலயே என்று மக்கள் குழம்பி உள்ளனர்.. இதையடுத்து, செங்கல்பட்டு வனச்சரகர் பாண்டுரங்கள் மஹிந்திரா வேல்டு சிட்டி பகுதிக்கு சென்று கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தார்.

    காட்டுப் பூனை

    காட்டுப் பூனை

    பிறகு "அது சிறுத்தை இல்லை, காட்டுப் பூனைதான். யாரும் பயப்பட வேணாம்.. மக்கள் நடமாட்டம் இப்போது குறைந்துள்ளதால் அந்தக் காட்டு பூனை வெளியே வந்திருக்கிறது.. அவ்வளவுதான்.. அந்த மெயின் ரோட்டில் 2 பக்கமும் காட்டுப்பகுதி உள்ளதால், அது சாலையை கடந்து சென்றிருக்கிறது.. தேவையில்லாமல் யாரும் வதந்தி கிளப்ப வேணாம்.. வதந்தி கிளப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. அது காட்டு பூனைதான் என்று வதந்திகளுக்கும், பீதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்!

    ஆனாலும் அது சிறுத்தையா? காட்டு பூனையா என்ற குழப்பம் மக்களிடத்தில் முழுமையாக போகவே இல்லை.. பீதி விவாதம் தொடர்கிறது!

    English summary
    lockdown: wild animal spotted crossing near Chengalpattu road, shocking video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X