For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியீடு: பிரவீன் குமார்

By Siva
|

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

Lok sabha election results will be announced from 10 am on friday: Praveen Kumar

தமிழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி துவங்கும். முதல் சுற்று எண்ணிக்கையின் முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று நம்புகிறேன். தேர்தல் முடிவுகளை நாளை காலை 10 மணி முதல் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்த உடனேயே முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். வாக்கு எண்ணும் பணியை தலைமை தேர்தல் அதிகாரி வெப்காஸ்டிங் மூலம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணுவதை பார்வையிடுவதற்கு என்று தலைமை செயலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இணையதளத்தின் மூலம் மக்களும் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முடிவுகளை தெரிந்து கொள்ள மையங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி வைக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வரக் கூடாது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை வாங்க வருகையில் அவர்களை அனுமதிக்கலாமா என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக எடுத்துக் கொண்டால் 20 அல்லது 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். தடையின்றி நடந்தால் மாலை 6 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். தடங்கல் ஏற்பட்டால் விடிய விடிய வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது உணவு இடைவேளை விடப்படமாட்டாது.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை பெறும் முன்பு நடத்தும் கொண்டாட்டங்கள் அவர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். வாக்குகளை எண்ணும்போது எந்திரம் பழுதானாலோ, குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தாலோ அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படலாம்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும். பாதுகாப்பு பணியில் மத்திய போலீஸ் படை, மாநில சிறப்பு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபடுவார்கள். ஒரு மையத்தில் 377 முதல் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். எனவே தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 626 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுயில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதால் அங்கு வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை 14ல் இருந்து 30 ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. மேலும் வடசென்னையில் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய வசதி இல்லாததால் மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க ஆணையம் அனுமதித்துள்ளது.

ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை 7ல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. யாரும் பணம் வாங்காமல் வாக்களித்திருந்தால் இந்த தேர்தல் மேலும் சிறப்பானதாக இருந்திருக்கும் என்றார்.

English summary
TN CEO Praveen Kumar told that lok sabha election results will be announced from 10 am on friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X