For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு விரல் புரட்சியே.. தமிழக மக்களுக்கு மாபெரும் ஆசிட் டெஸ்ட்.. நாளையுடன் ஓயுது பிரச்சாரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சோதனையாக வந்து சேர்ந்துள்ளது நாடாளுமன்றத் தேர்தல்.

சுற்றிலும் கொதிக்கும் பிரச்சினைகள், தகிக்கும் தமிழகம் என மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சவால்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த சூழலில்தான் வந்து சேர்ந்துள்ளது நாடாளுமன்றத் தேர்தல்.

இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகள் மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதை புதிய கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிக்கு கூடி வரும் கூட்டம் நிரூபிப்பதாக உள்ளது. மொத்தத்தில் வித்தியாசமான தேர்தலாக இது அமைந்துள்ளது.

தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா? பரபர கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்!தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா? பரபர கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்!

18 தொகுதி இடைத் தேர்தல்

18 தொகுதி இடைத் தேர்தல்

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதற்கு பிறகு பிரச்சாரம் செய்யக் கூடாது.

ஐந்தரை கோடி வாக்காளர்கள்

ஐந்தரை கோடி வாக்காளர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தரை கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தவுள்ளனர். இதில் ஆண்கள் 2,75,71,785 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 2,75,42,720

பலமுனை

பலமுனை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான களத்தை மக்கள் சந்தித்துள்ளனர். கருணாநிதி ஜெயலலிதா இல்லை. வலுவிழந்த அதிமுக, மறுபக்கம் எதிர்க்கட்சிகள். இதுவரை இல்லாத அளவுக்கு விளம்பரப்படுத்தப்படும் பாஜக. புதிய முகமான மக்கள் நீதி மய்யம், வாக்காளர்களை வசீகரிக்கும் நாம் தமிழர் கட்சி என வித்தியாசமாக இருக்கிறது தேர்தல் களம்.

ஆர்வம் காட்டாத மக்கள்

ஆர்வம் காட்டாத மக்கள்

ஆனால் தேர்தலின்போது மக்கள் தங்களைத் தேடி வரும் வேட்பாளர்களைப் பார்க்க, பேசுவதைக் கேட்க ஒரு ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அது இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் மிஸ்ஸிங். அதேசமயம், வாக்குகளை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்பதில் மக்கள் படு மும்முரமாக உள்ளனர் என்பதை மட்டும் உணர முடிகிறது.

97 தொகுதிகள்

97 தொகுதிகள்

தமிழகம் உள்பட மொத்தம் 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கும் 18ம் தேதி 2வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதர மாநிலங்கள் - புதுச்சேரி 1, கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரப் பிரதேசம் 8, அஸ்ஸாம் 5, பீகார் 5, ஒடிஷா 5, சட்டிஸ்கர் 3, மேற்கு வங்காளம் 3, ஜம்மு காஷ்மீர் 2, மணிப்பூர், திரபுராவில் தலா 1.

English summary
Lok Sabha elections 2019: Parliament and by elecdtion Campaign is all set to end in Tamil Nadu and Puducherry tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X