For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவப்பு நிலா அதிசயம்.. இன்று ஏற்படுகிறது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று தோன்றுகிறது இந்த நூற்றாண்டின் பெரிய சந்திர கிரகணம்- வீடியோ

    சென்னை: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது. உலகிலேயே இந்த நூற்றாண்டில் உருவானதில் இதுதான் நீளமான சந்திர கிரகணம் ஆகும்.

    சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதே சந்திர கிரகணம் ஆகும். மூன்றும் நேர்கோட்டில் இருக்கும் இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது.

    Longest lunar eclipse this century, People can see the Moon with their bare eyes

    அதாவது சூரியன், நிலவு, பூமி மூன்றும் நீண்ட நேரம் ஒரே நேர்கோட்டில் இருக்க போகிறது. சுமார் 103 நிமிடங்கள் தொடர்ந்து ஒரே நேர்கோட்டில் இருக்கும். இதனால் சந்திர கிரகணம் மிக நீண்டதாக இருக்கும்.

    இந்த சந்திரகிரகணம், இன்று இரவு 1 மணிக்கு தொடங்கும். காலை 2.43 மணி வேறை நீடிக்கும். இதனால் நிலவு சிவப்பு நிறத்தில் ரத்தம் போல காட்சியளிக்கும். ஆனால் சில இடங்களில் 11.45 மணிக்கே இரவில் சந்திர கிரகணம் தொடங்கிவிடும்.

    இதை அப்படியே வெறும் கண்களால் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. இனி இதே போன்ற நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு அன்று ஜூன் மாதம் 25-ந் தேதி ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    Longest lunar eclipse this century, People can see the Moon with their bare eyes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X