For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனதை மயக்கும் கண்ணன் பாடல்கள்... கோகுலாஷ்டமி ஸ்பெஷல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கண்ணனின் குறும்புகளைப் பற்றி கதைகளில் படிக்கும் போதே கற்பனையில் கண் முன் வரும். கண்ணனைப் பற்றி பாரதி அழகாக எழுதியுள்ளார். அவை பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன.

Lord Krishnan Songs for Janmashtami Special

சின்னக் கண்ணனைப் பற்றி கண்ணதாசனைப் போல வேறு யாராலும் எழுதியிருக்க முடியாது...ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சுவை... கேட்க கேட்க இனிமை. சில பாடல்கள் கேட்கும் போதே உறக்கம் தாலட்டும்... சில பாடல்கள் உற்சாகத்தைத் தரும்.

உறங்க வைக்கும் பாடல்

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே இந்த பாடலைக் கேட்க கேட்க ஒருவித உற்சாகம் பிறக்கும்

பாரதியின் கண்ணன்

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!

என்று கண்ணன் பற்றி பாரதி எழுதிய வரிகளை இசையோடு கேட்கும் போது கண்களின் முன் கண்ணன் வந்து நிற்பதை தவிர்க்க முடியாது.

கண்ணனின் கருணை

கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா!

சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கண்ணன் பற்றிய பாடலை கேட்கும் போது இந்த பாடலை தவிர்க்க முடியாது. கண்ணதாசனின் சீடர் பஞ்சு அருணாசலம் அவர்களின் வரியில் இளையராஜாவின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல் இது.

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

English summary
Lord Kannan Songs for Janmashtami Special.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X