For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடல் ஆரோக்கியத்திற்கு யோகாதான் பாஸ்போர்ட்.. மோடி பேச்சு

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு யோகக் கலைதான் பாஸ்போர்ட் என்றும் யோகா வெறுமனே உடற்பயிற்சி கிடையாது, அதையும் தாண்டிய அற்புதமான கலையாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோவை: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் யோகக் கலையை பழகுவோம் என்றும் அதுதான் உடல் ஆரோக்கியத்தின் பாஸ்போர்ட் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட்டிருந்த 112 அடி உயர சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: உலகிற்கு யோகா கலை என்பது நன்கொடையாகும். உடல் ஆரோக்கியத்துக்கு யோகா பயிற்சி இன்றியமையாததாகும். மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர யோகா மேற்கொள்ளுங்கள். யோகா பயில்வதால் பல நோய்களை கட்டுப்படுத்த முடியும். யோகா வெறுமனே உடற் பயிற்சி கிடையாது, அதையும் தாண்டிய அற்புதமான கலையாகும்.

Lord Shiva is a Only one manthra, says Modi

கலாசாரத்தில் பெண் தெய்வங்களை வணங்குகிறோம். அவர்கள்தான் மையப்புள்ளி. பெண்கள பலம் பெறாமல் சமூகம் வளம் பெறாது. பழமையானது என்பதற்காக ஒரு கொள்கையை மறுப்பது ஆபத்தானது. பழமையான கொள்கைகளை ஆராய்ந்து, புதிய தலைமுறைக்கு மாற்றி கொடுக்க வேண்டும். சமூக சீர்திருத்தங்களில் பல பெண் தலைவர்களை கண்ட நாடு நமது பாரத சேதமாகும். பெண்கள் தடைகளை உடைத்து டிரெண்ட் செட்டர்களாக மாறியுள்ளது நமது நாட்டில் தான்.

பெண்களை கடவுளின் அம்சமாக பார்க்கும் நாடு இந்தியாதான். அதேவேளை, ஆண்கள் நல்லது செய்தால்தான் கடவுளின் அம்சமாக மாற முடியும் என்றார். இவ்வாறு ஈஷாவில் சுமார் 20 நிமிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

English summary
Yoga is a passport for health care, says Prime minister Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X