For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்.. சரக்குகள் தேக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு-வீடியோ

    சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

    அண்மை காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் லாரி வாடகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

    டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசு இதனை காதில் போட்டுக்கொள்ளவில்லை. விலையும் குறைக்கப்படவில்லை.

    இன்று முதல் ஸ்டிரைக்

    இன்று முதல் ஸ்டிரைக்

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

    த.நா லாரி உரிமையாளர்கள்

    த.நா லாரி உரிமையாளர்கள்

    இதற்கு தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர்.

    பொதுமக்களின் தேவை

    பொதுமக்களின் தேவை

    பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் இந்த லாரிகள் மூலம் நகர்வு செய்யப்படுகின்றன.

    சரக்குகள் தேக்கம்

    சரக்குகள் தேக்கம்

    நாடு முழுவதும் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன.
    இந்நிலையில் தமிழகத்தில் இன்று 13 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தத்ததால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

    English summary
    Lorry strike across the country against petrol diesel price hike. Over 3 lakh lorries has participated in the strike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X