For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.950 கோடி இழப்பு.. பகீர் அறிக்கை தாக்கல்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.950 கோடி இழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.950 கோடி இழப்பு..வீடியோ

    கூடங்குளம்: தகுதியான தொழில்நுட்பத்தை உறுதிப்படுத்தாத காரணத்தினாலும், மின் உற்பத்தி பலகாலம் நிறுத்தப்பட்டதாலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    கூடங்குளம் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே பல நாட்கள் கிட்டத்தட்ட 60 அணுமின் நிலையம் மூடப்பட்டது. பிறகுதான் தெரியவந்தது, எரிபொருள் நிரப்புவது என்பது வல்லுனர்களின் தகுதித்திறன், அதன் எல்லைகளை பொறுத்தும் என்பது. அதனால் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல் இருக்கிறோமே என்று காலப்போக்கித்ன் இந்திய அணுமின் கழகம் உணர தொடங்கியது. அதற்கு பிறகுதான் ரஷ்ய நாட்டிலிருக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களை அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. ஏ.எஸ். எனும் நிறுனத்துடன் தான் இந்த ஒப்பந்தத்தினை இந்திய அணுமின் கழகம் போட்டது. ஆனால் இதற்கான செலவு76 சதவீதம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    Loss of Rs.950 crore to Koodankulam nuclear power

    ஆனால் இந்த ஒப்பந்தம் அணுமின் நிலையம் மூடப்பட்டிருந்த காலத்தில் போடப்பட்டுவிட்டது. அதனால் நேரமின்மை பற்றாக்குறையாலும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைவட நடத்த முடியாமல் போனதாலும் இந்த அதிக செலவு இந்திய அணுமின் கழகத்தின் தலைமேல் வந்து விழுந்தது. அதனால் அதை ஏற்று கொள்ள வேண்டிய நிலையில்தான் அணுமின்கழகம் உள்ளது. விளைவு... 60 நாட்கள் அணுமின் நிலையத்தை மூடுவதற்கு பதிலாக 222 நாட்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்நிலையில், தற்போது அணுமின் நிலையத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "அணு மின்நிலையத்தை மூட எடுத்த முடிவையும், தனது தொழில் நுட்ப வல்லுனர்களைக் கொண்டே எரிபொருள் நிரப்ப மேற்கொண்ட முடிவையும் விவேகம் இல்லாமல் மதிப்பீடு செய்யவில்லை. தொழில் நுட்ப தகுதியை உறுதிப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக அணு மின்நிலையத்தை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின் உற்பத்தியும் நீண்ட காலம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது".

    இவ்வாறு தலைமை கணக்கு தணிக்கையர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    English summary
    The Koodangulam nuclear power plant has lost Rs 947 crore loss, according to the Chief Account Auditor report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X