• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதற்கும் துணிந்த வனிதா.. எல்லாவற்றையும் மறந்த கணேசன்.. கள்ளக்காதலர்களின் டைரிக் குறிப்பு!

|

சிதம்பரம்: கள்ளக்காதல் எதுவுமே நிரந்தரமானது அல்ல.. நடுத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தும் .. மானம் போகும்.. அசிங்கப்பட வேண்டும்.. குடும்பங்கள் சிதறும்.. உடல் இச்சை, உணர்வுகளை சாகடித்து விடும்.. உண்மையான அன்பு, பாசம் செத்துப் போகும்.. பல நேரங்களில் உயிர்களும் போய் விடுகிறது.. இப்படி ஒரு கள்ளக்காதலில் சிக்கி உயிரை இழந்துள்ளார் சிதம்பரம் சப் இன்ஸ்பெக்டர் கணேசன்.

ஏற்கனவே ஒரு கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தன்னிடம் சிக்கிய வனிதாவை அப்படியே 'பிராக்கெட்' போட்டவர்தான் இந்த கணேசன். கடைசியில் அவரது உயிரையே 'லாக்' செய்து விட்டார் வனிதா.

கணேசனுக்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருந்தார் வனிதா. ஆனால் தான் சொன்னபடி கணேசன் நடக்கவில்லை. இதுதான் கொலையில் போய் முடிய காரணமாக அமைந்து விட்டது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சிதம்பரம் அருகே சி.முட்லூரை சேர்ந்தவர் வனிதா. தையாகுப்பத்தை சேர்ந்த கலைமணியும் இவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு சபரி என்கிற 7 வயது மகன் உள்ளான்.

மினி பஸ்ஸில் முதல் கள்ளக்காதல்

மினி பஸ்ஸில் முதல் கள்ளக்காதல்

சிதம்பரத்தில் படிக்கும் மகன் சபரியை, பள்ளியில் விடுவதற்காக மினி பஸ்சில் வனிதா அழைத்து செல்வார். அப்போது அந்த மினிபஸ் டிரைவருக்கும், வனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

பிச்சாவரத்தில் வைத்து சிக்கல்

பிச்சாவரத்தில் வைத்து சிக்கல்

ஒருமுறை இருவரும் பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு சென்றனர். அப்போது வனிதா பர்தா அணிந்திருந்தார். இதை பார்த்த முஸ்லிம்கள் சந்தேகமடைந்து வனிதாவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆஹா.. என்ன அழகு.. கவிழ்ந்த கணேசன்

ஆஹா.. என்ன அழகு.. கவிழ்ந்த கணேசன்

வனிதாவை விசாரிக்கும் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் வந்தது. வனிதாவைப் பார்த்த அவர் விசாரணை செய்வதற்குப் பதில் அவருடைய அழகை ஆராய ஆரம்பித்து வி்ட்டார். அவரது மனதுக்குள் பிதாகரஸ் தேற்றம் உள்ளிட்ட அத்தனை கணக்குகளும் வந்து போயின. முடிவெடுத்தார்

என்னுடன் வா...

என்னுடன் வா...

உனது கள்ளக்காதலை கணவருக்குச் சொன்னால் உனக்கு வாழ்க்கையே போய் விடும். என்னுடன் வந்து விடு என்று சொல்ல, அவருடைய டீல் உடனடியாக வனிதாவுக்குப் பிடித்துப் போய் விட்டது.

2வது கள்ளக்காதல் ஸ்டார்ட்

2வது கள்ளக்காதல் ஸ்டார்ட்

இதையடுத்து வனிதாவின் 2வது கள்ளக்காதல் தொடங்கியது. அவரும் கணேசனும் தங்கு தடையின்றி சுற்றினர். கள்ளக்காதல் வேகமாக வளர்ந்து இறுகியது.

புருஷனாவது.. பிள்ளையாவது

புருஷனாவது.. பிள்ளையாவது

கணேசனின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட வனிதா. கணவரையும் பெற்ற பிள்ளையையும் மறந்தார். கணேசனுடன் முழுமையாக ஊர் ஊராக சுற்றத் தொடங்கினார்.

''சப் இன்ஸ்பெக்டரம்மா....''

''சப் இன்ஸ்பெக்டரம்மா....''

கணேசன், வனிதாவை விதம் விதமாக மகிழ்வித்து அழகு பார்த்தார். டிரஸ் வாங்கிக் கொடுத்தார். தனது யூனிபார்மை கூட அணிவித்து போட்டோ எடுத்து எப்பூடி என்று வனிதாவைக் குளிர்வித்தார்.

திருடா .. திருடி!

திருடா .. திருடி!

அதை விட காமெடி என்னவென்றால் இவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் செல்போனில் தங்களது காமக் களியாட்டத்தை வீடியோவிலும் எடுத்து வைத்திருந்துள்ளனர்.

கலைமணிக்கு குட்பை

கலைமணிக்கு குட்பை

இந்த நிலையில் நீ விவாகரத்து பெற்று விட்டு வா. உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கணேசன் கூற அப்படியே ஏற்றார் வனிதா. உடனடியாக கணவரை விட்டுப் பிரிந்தார். பிள்ளையையும் வேண்டாம் என்று உதறினார். விவாகரத்தும் பெற்றார்.

புதுச்சேரியில் குடித்தனம்

புதுச்சேரியில் குடித்தனம்

இதைத் தொடர்ந்து முதலில் சிதம்பரம் அண்ணாமலை நகரிலும், பின்னர் புதுச்சேரியிலும் குடித்தனமும் செய்துள்ளனர்.

இடையில் வந்து சிக்கிய சத்யா..

இடையில் வந்து சிக்கிய சத்யா..

இந்த நிலையில்தான் திடீரென தனது நிலையிலிருந்து மாறிய கணேசன் சத்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதை வனிதா எதிர்பார்க்கவில்லை.

பழி தீர்க்க முடிவு

பழி தீர்க்க முடிவு

கணேசனை நம்பி புருஷனையும், பிள்ளையையும் உதறி விட்டு வந்தும், விவாகரத்து செய்தும், கணேசன் கேட்டதையெல்லாம் செய்தும் அவர் தன்னை உதறியது வனிதாவை கோபத்தில் மூழ்கடித்தது. கணேசனைக் கொல்லத் திட்டமிட்டார். நினைத்தபடி அதையும் நிறைவேற்றினார்.. இப்போது சிறையில் அடைபட்டுள்ளார்.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை

கட்டுப்பாடற்ற வாழ்க்கை

கணேசனின் அப்பாவும், அம்மாவும் இறந்து விட்டனர். சிறு வயதிலிருந்தே கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்து வந்துள்ளார். உல்லாசமே உலகம் என்று நினைத்து விட்டார்.

மக்களிடமும் தகராறு

மக்களிடமும் தகராறு

கிள்ளை சப் இன்ஸ்பெக்டராக இருந்தபோது பொதுமக்களிடமும் இவருக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. அடாவடியான போலீஸ்காரர் என்றுதான் அனைவரும் கூறுகின்றனர். ஊரில் நல்ல பெயர் இல்லை.

அ்ப்பாவி சத்யாக்களுக்கு விமோச்சனம் எப்போது..?

அ்ப்பாவி சத்யாக்களுக்கு விமோச்சனம் எப்போது..?

எது எப்படியோ.. கள்ளக்காதல்களுக்கு இப்படித்தான் ஒரு மார்க்கமான முடிவு வரும் என்பதை உலகக் கள்ளக்காதலர்கள் புரிந்து கொண்டு திருந்தினால், வருந்தினால், நல்லதுதான்.. ஆனால் எங்கே திருந்தப் போகிறார்கள். இவர்களின் காம விளையாட்டுக்களில் சிக்கி பாவம் சத்யா போன்ற அப்பாவிகள்தான் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 
 
 
English summary
Murdered Ganesan has cheated his paramour Vanitha in many ways. This is the major reason for the woman to take the extreme decision
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X