For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரி டூ கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை பெய்யும்.. ஜில் ஜில் அறிவிப்பு

கன்னியாகுமரி முதல் தெற்கு கர்நாடகா வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரி டூ கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை பெய்யும்..வீடியோ

    சென்னை: கன்னியாகுமரி முதல் தெற்கு கர்நாடகா வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.

    இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் வடதமிழகம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் தற்போதே தண்ணீர் பஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது.

    சமாளிக்க முடியும்

    சமாளிக்க முடியும்

    இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வுநிலை

    காற்றழுத்த தாழ்வுநிலை

    இந்நிலையில் சென்னை வானிலை மையம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கன்னியாகுமரி முதல் தெற்கு கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    மழைக்கு வாய்ப்பு

    மழைக்கு வாய்ப்பு

    இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மக்களிடையே மகிழ்ச்சி

    மக்களிடையே மகிழ்ச்சி

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் இந்த தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Chennai Meteorological center has said that low depression has formed from Kanniyakumari to South Karnataka. Tamil Nadu and North Tamil Nadu will get rain due to low depression.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X