For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டையில் 27 செ.மீ, சின்ன கல்லார் 21 செ.மீ.. தமிழகத்தில் வெளுக்கும் மழை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

    நேற்று வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது.

    Low pressure brings rain to Tamilnadu: Balachandran

    இது மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்பதால் மலை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு கன மற்றும் மிக மழையும், தமிழகம் மற்றும் புதுவையின் எஞ்சிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    மீனவர்கள் வடக்கு ஆந்திரா, வடக்கு வங்க கடல்பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் . சென்னையை பொருத்த வரையில் இடைவெளிவிட்டு ஒரு சில முறை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்ச மழை அளவாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 27 செ.மீ மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார் 21 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை 20 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் 19 செ.மீ, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.

    English summary
    Balachandran, Regional Meteorological Director says Low pressure has formed in north-west of Bay of Bengal is expected to bring heavy rain to Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X