For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு எங்களோடது அல்ல.. லயோலா கல்லூரி விளக்கம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து லயோலா கல்லூரி சார்பில் எந்த கருத்துக்கணிப்பும் வெளியிடவில்லை என்று அந்த கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்கே நகரில் வெற்றிபெறப்போகும் தினகரன் - கருத்துக்கணிப்பில் தகவல்- வீடியோ

    சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து லயோலா கல்லூரி சார்பில் எந்த ஒரு கருத்துக்கணிப்பும் வெளியிடவில்லை என்று அந்த கல்லூரி அறிவித்துள்ளது.

    லயோலா கல்லூரியின் பெயரில் எந்த குழுவினர் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டாலும் அதற்கு கல்லூரி பொறுப்பேற்காது என்று அந்த கல்லூரியின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக்கணிப்பில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவார் என்றும், அவரை அடுத்து தினகரன் பெருவாரியான வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பில், டிடிவி தினகரன் 35.5% வாக்குகள் பெற்று பெறுவார் என்றும் அவருக்கு அடுத்த இடத்தை திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 28.5% வாக்குகளை பெறுவார் என்றும் வெளியானது.

    அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனுக்கு 21.3% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 4.6% வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1.5% வாக்குகளையும் பெற்று 5வது இடத்தை பிடிப்பார் என்றும் தகவல் வெளியானது.

    இந்த கருத்துக்கணிப்பு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெறுவாரா? அதற்குப் பின்னர் என்ன நடக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது.

    இந்த நிலையில் லயோலா கல்லூரி சார்பாக எந்த கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை என்று அந்த கல்லூரியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. லயோலா கல்லூரியின் பெயரில் எந்த குழுவினர் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டாலும் அதற்கு கல்லூரி பொறுப்பேற்காது என்று அந்த கல்லூரியின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    English summary
    Loyola college press release said, Loyola college any unit with un loyala college campus denies having any electoral opinion poll in the context of byelection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X