For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாக 37% பேர் கருத்து

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக 37 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பதாக லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இவர்களின் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று 14 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி பற்றி ஒருபக்கம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் ஆள் ஆளுக்கு முதல்வர் வேட்பாளர் என்று கூறிக்கொண்டு மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் தொடங்கிவிட்டனர்.

லயோலா கல்லூரி

லயோலா கல்லூரி

2016 சட்டசபைத் தேர்தல் ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் சார்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அடுத்த முதல்வர் யார் என்ற 3,370 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஆகக் கூடிய தகுதி முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளதாக பெரும்பான்மையோனோர் வாக்களித்துள்ளனர்.

அதிமுக - பாஜக கூட்டணி

அதிமுக - பாஜக கூட்டணி

சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 சதவிகிதம் பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 சதவிகிதம் பேர் மறுக்க முடியாது என்றும், 9 சதவிகிதம் பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 சதவிகிதம் பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மாற்று சக்தி இருக்கிறதா?

மாற்று சக்தி இருக்கிறதா?

அதிமுக - திமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிகவும், பாஜகவும் கூறி வருகிறது. இந்த நிலையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பில் அதிமுக, திமுகவிற்கு மாற்று சக்தி கிடையாது என்று 53.4 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

கருத்துக்கணிப்பு எப்படி?

கருத்துக்கணிப்பு எப்படி?

28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் 3370 பேரை சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்துள்ளார். 2001 முதல் 2011 வரை நடைபெற்ற தேர்தலின் போது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அனைத்துமே வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல் தேர்தல் தொடங்கும் வரை மூன்று கட்டங்களாக ஆய்வு நடத்தப்படும் என்றும் பேராசிரியர் ராஜநாயகம் கூறியுள்ளார்.

English summary
2016 Assesmbly Elections, AIADMK – BJP alliance chances 37 % favoured by voters as Per Loyola College survey Report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X