For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது ஒன்னுதான் கொறச்சல்.. வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் காஸ் விலை ரூ.35.50 உயர்வாம்

வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வு- வீடியோ

    சென்னை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகள் காரணமாக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை ரூ.770.50 ஆக இருந்தது.

    LPG cylinder price hike Rs.35.50

    இந்நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன்கிழமை முதல் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.806 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டருக்கு ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல, வீடுகளுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.484.67 -லிருந்து ரூ.486.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டருக்கு ரூ.1.75 உயர்த்தப்பட்டுள்ளது.

    டெல்லியில் மானிய விலையிலான சிலிண்டர் விலை ஜூலை மாதம் ரூ.496.26 ஆக இருந்தது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரூ.498.02 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    English summary
    LPG cylinder price hike Rs.35.50, in July month non subsidiary LPG gas cylinder provided price of Rs.770.50 now hiked to Rs.806.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X