For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

60 ஆண்டுக்குப் பின் தைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் காலையில் தேரோட்டம்

60 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச திருநாளன்று சந்திர கிரகணம் வருவதையடுத்து தைப்பூச தேரோட்டம் காலையில் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: பழனியில் வரும் 31ம் தேதி காலை தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என பழனி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச திருநாளன்று சந்திர கிரகணம் வருவதையடுத்து தைப்பூச தேரோட்டத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைபூசம் திருவிழா

தைபூசம் திருவிழா

பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.

சிங்கப்பூர் மலேசியாவில் திருவிழா

சிங்கப்பூர் மலேசியாவில் திருவிழா

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, செய்கோன், மொரீஷியஸ் முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

தைபூச திருவிழா

தைபூச திருவிழா

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30ஆம் தேதியும் தேரோட்டம் ஜனவரி 31ஆம் தேதி தைப்பூச தினத்தன்று நடக்கிறது.

கோவில் நடை அடைப்பு

கோவில் நடை அடைப்பு


ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.

காலையில் தேரோட்டம்

காலையில் தேரோட்டம்

தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகலில் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

English summary
After about 60 years, the annual car festival of Sri Dhandayuthapani Swamy Temple, Palani will take place in the forenoon instead of evening on January 31, 2018 in view of lunar eclipse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X