For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 பேரின் உயிரை குடித்த ஆடி காரின் டிரைவர் மதுபோதையில் இருந்தது அம்பலம்!

6 பேரின் உயிரை குடித்த ஆடி காரின் டிரைவர் மதுபோதையில் இருந்தது அம்பலமானது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை விபத்தில் 7 பேர் பலி | குளத்தில் மிதந்த பெண்ணின் உடல்- வீடியோ

    சென்னை: 6 பேரின் உயிரை குடித்த ஆடி காரின் டிரைவர் மதுபோதையில் இருந்ததை ஒப்புக் கொண்டார்.

    கோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பெரியார் பல் நிலையத்தில் பொதுமக்களும், மாணவர்களும் காத்திருந்தனர். இதன் அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்டும் உள்ளது. அப்போது அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

    Luxury car driver Jagadeesan was in drunk and drive when he did accident

    அந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் அங்கிருந்த மின்கம்பம் சேதமடைந்தது. மேலும் பூக்கடை மீதும் மோதியது.

    இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் மற்றும் 3 பயணிகளும், சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர். இறந்தவர்கள் சோமு (55), சுரேஷ் (43), அம்சவேணி (30), சுபாஷினி (20), ஸ்ரீரங்கதாஸ் (75) மற்றும் குப்பம்மாள் (60) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது. சம்பவ இடம் விரைந்த போலீஸார் சொகுசு காரை ஓட்டிய டிரைவர் ஜெகதீசனை போலீஸார் கைது செய்தனர்.

    அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் நேற்றைய தினம் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது அம்பலமானது. மருத்துவர் முன்னிலையில் ஜெகதீசன் கொடுத்த வாக்கு மூலத்தை போலீஸார் சான்றிதழாக பெற்றுக் கொண்டனர்.

    மேலும் ரத்த மாதிரிகளின் முடிவுகளுடன் நீதிமன்றத்தில் மருத்துவ சான்றிதழையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    English summary
    Luxury Car driver Jagadeesan was drunk and drive when he did accident in Coimbatore which results 6 died.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X