For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்பூரில் தனி ஒருவராக பேருந்தை மறித்த திமுக பெண் தொண்டர்: நேரில் வரவழைத்து ஸ்டாலின் பாராட்டு

ஆம்பூரில் பேருந்தை மறித்த தெய்வநாயகிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக கொடியுடன் ஆம்பூரில் கெத்து காட்டிய தேவயாணி

    வேலூர்: வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடியுடன் தன்னந்தனியாளாக பேருந்தை நிறுத்தி மறியல் செய்த தெய்வநாயகியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் சில மாவட்டங்களில் ஒரு சில அரசு பேருந்துகள் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

     M.K.Stalin appreciates Deivanayaki who block the bus in Ambur

    அதன்படி திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு சென்ற அரசு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே தங்க நாற்கர சாலை ஓரம் நின்றது. அதில் சில பயணிகள் ஏறியதை பார்த்த அங்கு தெய்வநாயகி என்ற 60 வயது பெண்மணி கடும் கோபமுற்று, திமுக கொடியுடன் சாலையின் குறுக்கே தனியாளாக ஓடி, பேருந்தை எடுக்க முடியாமல் நிறுத்திவிட்டார். அத்துடன், ஓட்டுனரை பார்த்து பேருந்தை எடுக்க கூடாது என ஆவேசப்பட்டார்.

    [Read This: "பஸ்ஸை எடுத்தே...கண்ணாடியை உடைச்சிடுவேன்"- ஆம்பூரில் கெத்து காட்டிய 'தேவயாணி' ]

    திமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் இச்சம்பவம் ஆச்சரியப்பட வைத்தது. தெய்வநாயகி, தனியாக பேருந்தை மறித்தது வீடியோவாக சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேவயாணியை நேரில் வரவழைத்து பாராட்டினார்.

    இது தொடர்பாக ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், அதில், தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற #DMKProtest ல், வேலூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தை ஒற்றை ஆளாக நிறுத்தி நம் உரிமைக்காக போராடுகிற போது பேருந்தை இயக்க கூடாது என மறியல் செய்த கழகத்தைச் சார்ந்த தெய்வநாயகி அவர்களை இன்று நேரில் சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்..

    English summary
    The party's activist MK Stalin said on Twitter that he had welcomed Dinavanayaki, who had stopped the bus to stand on the national highway with the DMK flag on the national highway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X