For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்ஃபி எடுத்த ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்த ஸ்டாலின் பரபரப்பு வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: நீலகிரி மாவட்டம் கூடலூரில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2016 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 'நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். கடந்த செப்டம்பர் 20ம் தேதி குமரியில் தொடங்கி அக்டோபர் 2ம் தேதி திருச்சியில் முடித்தார்.

சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தனது இரண்டாம் கட்ட பயணத்தை நீலகிரியில் கடந்த 7ம் தேதி ஸ்டாலின் துவக்கினார். முதுமலை தெப்பக்காடில் தனது பயணத்தை துவக்கிய ஸ்டாலின், கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டு, மக்களோடு உரையாற்றினார்.

அப்போது தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் தாக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், அதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. அந்த ஆட்டோ டிரைவரும் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.

என்னா அடி

என்னா அடி

கூடலூரில் நடைபயணத்தின் போது ஸ்டாலின் ஆட்டோ டிரைவரை தாக்கிய வீடியோ காட்சிகள் இன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிய இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் மக்கள் மத்தியில் நடந்து வருகிறார். கூட்ட நெரிசல் அதிகரிக்க, மக்களை விலக்கிக்கொண்டு அவர் கூட்டத்தில் இருந்து வெளியே நடந்து வருகிறார். அப்போது அவருக்கு நெருக்கமாக சென்று தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயல்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். அப்போது ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்து, அவரை தள்ளி விடுகிறார் ஸ்டாலின்.

மிரண்டு போன டிரைவர்

மிரண்டு போன டிரைவர்

தொடர்ந்து அவருடன் வரும் பாதுகாவலர்களும் ஆட்டோ டிரைவரை தள்ளி விடுகின்றனர். இதனால் அந்த ஆட்டோ டிரைவர் மிரண்டு போய் விலகிப் போகிறார்.

செல்ஃபி எடுத்தது தவறா?

செல்ஃபி எடுத்தது தவறா?

ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் தாக்கிய இந்த சம்பவம் கூடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஆட்டோ டிரைவரின் பெயர் திலீப் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்னையை பெரிதாக்க அ.தி.மு.க.வினரும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.

மெட்ரோ ரயிலில் அடி

மெட்ரோ ரயிலில் அடி

ஏற்கனவே, மெட்ரோ ரயிலில் பயணித்த போது, பயணி ஒருவரை ஸ்டாலின் தாக்கியதாக எழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் அடுத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆனால் ஸ்டாலின் தன்னை அடிக்கவில்லை என்றும் கன்னத்தை தடவிக் கொடுத்தார் என்றும் சம்பத்தப்பட்ட நபரே கூறியதால் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

நீங்களே பாருங்க மக்களே

இந்த வீடியோவைப் பாருங்க ஸ்டாலின் அடித்தாரா? கன்னத்தில் செல்லமாக தட்டிக்கொடுத்தாரா? பார்த்துவிட்டு உங்க கருத்தை சொல்லுங்க மக்களே!

கல்லூரி மாணவிகள்

கல்லூரி மாணவிகள்

கடந்த முறை நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் கல்லூரி மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். ஆனால் ஆட்டோ டிரைவர் செல்ஃபி எடுக்க வந்த போது அடித்தது ஏன் என்றும் ஆதங்கப்படுகின்றனர் பொதுஜனங்கள்.

English summary
DMK treasurer MK Stalin was caught in a controversy on Wednesday night as he pushed an auto driver who had approached him to take a selfie, in Gudalur in the Nilgiris. The unsavoury incident happened during Stalin’s ‘Namakku Naamey’ campaign at Gudalur in Nilgiris district, when an auto driver eagerly approached him to take a selfie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X