For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பின்லாந்தில் பலியான சென்னை ஐடி இளைஞர்... மு.க.ஸ்டாலின் இரங்கல்

பின்லாந்தில் மரணமடைந்த சென்னை ஐடி இளைஞர் ஹரிஹர சுதனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர வெளியுறவு அமைச்சகம் உதவ வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: பின்லாந்தில் மரணம் அடைந்த சென்னை ஐடி துறை இளைஞர் ஹரிஹரன் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் உதவ வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஹரிஹர சுதன். இவர் பின்லாந்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

 M.K.Stalin Requested External affairs ministry to bring Harihara Sudan to India.

அதனையடுத்து அவரின் பெற்றோர் வெளியுறவுத்துறைக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் அவரது உடல் பின்லாந்தில் உள்ள ஹெர்னஸரி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக அங்குள்ள போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டரில், ஹரிஹர சுதன் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய உடலை இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
M.K.Stalin Requested Ministry of External affairs to bring the body of Harihara Sudan who died in Finland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X