For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சியிலும்.. ஆட்சியிலும்.. மு.க. ஸ்டாலின் வகித்த பதவிகள் என்னென்ன?

சிறு வயது முதல் இயல்பாகவே திமுகவில் இணைந்து போன மு.க. ஸ்டாலின், பின்னர் கட்சியின் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று பணியாற்றியுள்ளார். அதே போன்று தமிழக அரசிலும் அவர் பல பதவிகளை வகித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொதுக் குழுவில் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியிலும், தமிழக அரசிலும் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று செயலாற்றியவர் ஸ்டாலின். உள்துறை அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழக அரசிலும், இளைஞரணி செயலாளர், பொருளாளர் என கட்சியிலும் பதவிகள் தொடர்ந்தன.

திமுக பொதுக்குழு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் மு.க. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவியுடன் செயல் தலைவர் பதவியையும் சேர்த்து அவர் வகிப்பார் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.

இளைஞர் அணி செயலாளர், பொருளாளர், தற்போது செயல் தலைவர் என்ற பொறுப்பிற்கு வந்துள்ள ஸ்டாலின் தமிழக அரசிலும் பல்வேறு பதவிகளை ஏற்று செயல்பட்டவர். மேயர், உள்துறை அமைச்சர் என அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இளைஞரணி

இளைஞரணி

திமுகவில் சாதாரண உறுப்பினராக இருந்து திமுகவின் தேர்தல் பிரச்சார நாடகங்களை நடத்தி வந்த மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக 1980ல் பொறுப்பேற்றார். மதுரையில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் ஒரு அமைப்பாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் நடத்தி நிதி வசூல் செய்து சிறப்பாக பணியாற்றியதால் இளைஞரணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

பொருளாளர்

பொருளாளர்

இதனைத் தொடர்ந்து, கட்சியில் 2009ஆம் ஆண்டு திமுகவின் பொருளாளரானார் ஸ்டாலின். அதுவரை இளைஞர் அணியின் பொறுப்பில் இருந்த மு.க. ஸ்டாலின் கட்சியின் பொதுக் குழுவில் பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2 முறை மேயர்

2 முறை மேயர்

1996ம் ஆண்டு சென்னையில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தைலில் முதல் முறையாக மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை மு.க.ஸ்டாலின் பெற்றார்.

2001ம் ஆண்டு 2வது முறையாக மீண்டும் ஸ்டாலின் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். அந்தப் பதவியில் அவர் தொடர முடியாத அளவிற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தார். அதன் மூலம் ஒருவர் இரு அரசு பதவிகளில் வகிக்க முடியாது என்ற அடிப்படையில் மேயர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் விலக நேரிட்டது.

உள்ளாட்சித் துறை அமைச்சர்

உள்ளாட்சித் துறை அமைச்சர்

2006 முதல் 2010 வரை திமுக தமிழகத்தை ஆண்ட போது, மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி ஏற்றார். மேயர் பொறுப்பை ஏற்று செயலாற்றிய அனுபவம் உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பிற்கு கை கொடுத்தது. அந்தக் காலக்கட்டத்தில்தான் 9 பாலங்கள் சென்னையில் கட்டப்பட்டன. சிறந்த நிர்வாகியாக பத்திரிகைகளால் பாராட்டப்பட்டார்.

துணை முதல்வர்

துணை முதல்வர்

தமிழக வரலாற்றில் அதுவரை இல்லாத துணை முதல்வர் பதவியை 2009ம் ஆண்டு ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். அவரது தந்தையும், கட்சியின் தலைவருமான மு. கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவரது முதுமை காரணமாகவும், அவரது முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலும், திமுக பொருளாளருமான ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு மே மாதம் முதல் 2011ம் ஆண்டு தேர்தல் வரை அவர் அந்தப் பொறுப்பை வகித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அசைக்க முடியாத எதிர்க்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து கொளத்தூரில் நின்று வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவரானார். இந்த முறையும் திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது முதுமை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK treasurer M.K. Stalin have become the top power in his party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X